சனிபெயர்ச்சி 2011
ஜோதிடம் கூறும் நன்நூலகத்தில் சனி பகவானின் பெயர்ச்சி என்பது கூர்ந்து கவனிக்ககூடிய ஒரு வானியல் நிகழ்வாகும். நடப்பு கர வருடத்தில் சனி பகவான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் இருந்து மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த வானியல் அதி முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சியில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். ஒவ்வொரு முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த நிகழ்வானது நடைபெறுகிறது. ஆகவே இந்த சனி பெயர்சியானது ராசி மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் அநுகிரஹ மூர்த்தியாக செயல்பட்டு பல்வேறு விதமான நற் பலன்களையும் வழங்கவிருக்கிறார். ஒருவர் நல்ல மனோ நிலையில் இருக்கும்போது அவரிடமிருந்து நல்ல பலன்களையே எதிர் பார்க்கலாம். தற்போது சனி பகவானனவர் உச்ச நிலை பெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிமுக்கியத்துவம் வாய்ந்த சனி பகவானின் பெயர்ச்சியால் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் நடைபெறும் பலன்களை திண்டுக்கல் ப.சின்னராஜ் ஜோதிடர் அவர்கள் வழங்கி இருக்கிறார்.
|
|
வதிரி இணையத்தளம்