காலத்தின் கட்டாய தேவைக்கமைய புத்திஜீவிகளால் 1991 இல் உருவாக்கப்பட்டதே
யா / வடமராச்சி மத்திய மகளிர் கல்லூரி. கரவெட்டி பிரதேசத்தில் தனித்த மகளிர் கல்லூரியாக மிளிர்கின்ற இக்கல்லூரி செல்லையா பள்ளிகூடத்தின் பரிணாம வடிவம். தரம் ஆறு தொடக்கம் க.பொ.தா உயர்தர வரை தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் போதனை நடைபெறுகிறது. கலை, வர்த்தக, விஞ்ஞான, கணிதக் கற்கைநெறிகள் நான்கும் உள்ளன. முதன்மையும் தனித்துவமும் கொண்ட GCE (O /L ) (A /L ) பரீட்சைப் பெறுபேறுகளின் தொடர்ச்சி கூர்ப்படைந்து வருகின்றது . தற்போது மூன்றரைக் கோடி ரூபா செலவில் (130*40) பரிமாணம் கொண்ட கேட்போர் கூடம் உள்ளிட்ட மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று அரசாங்கத்தால் ஏமது கல்லூரிக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான இடவசதி இல்லை . இது தொடர்பாக இடத்தை பார்வை இட்ட பொறியியலாளர் இடமின்மையால் கட்டிடம் அமைக்க முடியாதென நிராகரித்து விட்டார். பின்னர் பாரியளவில் மேற்கொள்ளபட்ட முயற்சிகளால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . கல்லூரி விளையாட்டு மைதானத்தோடு தொடர்ச்சியாக இருந்த திரு .நல்லையா குமரகுருபரன் என்பவருக்கு சொந்தமான ஏழு பரப்பு காணியை ௫௦ லட்சம் ரூபாவிற்கு வாங்க ஒழுங்கு செய்துள்ளோம். காணிக்கான இப்பணத்தை அரசாங்கமோ தொண்டு நிருவனகளோ வழங்க மாட்டா. இக்கட்டான இச்சந்தர்ப்பத்தில் பாடசாலை ஸ்தாபகர் செல்லையாவின் புதல்வரும் ஒய்வு பெற்ற இலங்கை வங்கி முகாமையாளருமான திரு மகேந்திரன் என்பவரைத் தெய்வமே எம்மோடு இணைத்துள்ளது. காணி மதிப்பீடு பேரம் பேசல் நிதிசேகரிப்பு பொறுப்பு அனைத்தினதும் இணைப்பாளராக திரு .மகேந்திரனே செயற்படுகிறார் தருணமறிந்து கருணைகூர்ந்து நேசக்கரம் நீட்டி இயன்றளவு உதவுங்கள். தங்கள் உதவி மே 15ம் திகதிக்கு முன்னதாக எம்மை வந்தடையும் வண்ணம் கேட்டுகொள்ளுகிறோம். மேற்குறிப்பிட்ட கல்விப்பணிக்குரிய நிதியை கனடாவில் சேகரிப்பதுக்கு பின்வரும் அன்பர்கள் முன்வந்தமையால் அவர்களையே நாங்கள் அப்பணிக்கு நியமித்துள்ளோம் என்பதை அறியத்தருகிறோம். 1.ஆறுமுகம் இராஜரட்ணம் 2.கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (செல்லையா) 3.கந்தையா பொன்னம்பலம் 4.நரசிங்கம் ஞானேந்திரன் 5.மனோகரன் மாணிக்கம் வெளிநாட்டு தொடர்புக்கு 1-Selliah Mahenthiran ( Former Vadacentral Management) Canada - 416-696-6378 2-Varatharaja Rasiah ( Varathan Master) Thulkaddu, Vathiry +94-21-226-2227 3-Raj. A. Rasartnam (Kalwathai) Canada -416-726-8055 தொடர்புகளுக்கு: வங்கிகணக்கு விபரம் School T.P No: 021 226 46 88 A/C 1-0032-01-4165-8 Web:www.vadacentral.sch.lk National Saving Bank Point Pedro Vadamarachy Central Ladies College Email:[email protected] Land Purchasing, Vathiri Karaveddy நன்றி இவ்வண்ணம் பாடசாலைச் சமூகம் கனடா வாழ் வதிரி மக்கள் அன்பளித்த பண விபரம்இதே மாதுரி மற்றைய நாடுகளில் இருந்து உதவியை எதிர் பாக்கிறோம்HTML Comment Box is loading comments...
|
வதிரி இணையத்தளம்