வதிரி இணையத்தளம்
  • HOME
  • About us
  • Contact
  • HDTV
  • Member Fourm

_இனிய புது வருட வாழ்த்துகள்  2012

Picture
புதுப் புனலாய்
பொங்கி வரும் புதுவருடமே...
புதுப் பொலிவைத் தந்திங்கு
பூஞ்சிதறலாய் புவியினை
நனைத்திடுவாய்!

இன்னல் உற்ற எம்மினம்
ஏற்றம் காணும் ஆண்டாய்
எங்கும் ஏக வழி சமைத்திடுவாய்!

தமிழ் மானம் காத்த
மாவீரரின்
மடியாத நினைவு சுமந்து
மண் மீட்பின்
மகத்துவத்தை உலகறியச் செய்திடுவாய்!

கொடுங்கோலின் ஆட்சியில்
செங்கோலின் மகத்துவத்தை
அகிலம் போற்ற பரப்பிடுவாய்!!

புதிதாய்ப் பிறக்கும்
புதுப் பிறப்பே
புது யுகம் ஒன்றை
பூமியில் நீ படைத்திடுவாய்!!


_உங்கள் உறவினர்களுக்கு வாழ்த்து இங்கே தெருவிக்க...

HTML Comment Box is loading comments...
Powered by Create your own unique website with customizable templates.