தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவு தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே .
புலம் பெயர் நாடுகளில் வாழும் எம் அம்பிகை அடியார்களே அறியத்தருவது என்வென்றால் எமது ஆலயத்தின் முருகப் பெருமான் அமைந்திருக்கும் இடமான உள் வடக்கு வீதியில் உள்ள கட்டிடம் (மண்டபம்) மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும் ஆகம விதிமுறைகளுக்கு ஒவ்வாமல் இருப்பதாலும் அதை மீண்டும் புதிதாக நிர்மானிக்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுளோம் இதனை மீண்டும் நவீன முறையில் புனரமைப்பு செய்வதற்கு கட்டிட கலைஞரின் (சிற்பசாரி) கணக்குப்படி 30 இல் இருந்து 35 லட்சம் ரூபாய் வரை செலவாகுமென கணக்கிடப்பட்டுள்ளது ஆகையினால் தங்களால் இயன்ற பண உதவி செய்து இப் பெரும்பணியை நிறைவு செய்ய உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.