குருப்பெயர்ச்சி பலன்கள் 2011
குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு 8-5-2011 ஞாயிற்றுக்கிழமையன்று பகல் 2.14 மணிக்கு பெயர்ச்சியாகிறார். 17-5-2012 வரை குரு பகவான் மேஷ ராசியி லேயே சஞ்சாரம் செய்கிறார். இந்த குருப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்ப ராசி நேயர் களுக்கு அசுப பலன்களும்; மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசி நேயர்கள் ஏற்றமான பலன்களும் உண்டாகும். அசுப பலனை அடையும் நேயர்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. இதனைப் படித்து அனைவரும் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
முருகு இராசேந்திரன்
மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கும் மேஷ ராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களது பொருளாதார நிலையானது சிறப்பாகவே இருக்கும். என்றாலும் மற்றவர்களுக்குப் பணம் கொடுப்பது- வாங்குவது போன்றவற்றில் கவனமுடன் இருப்பது உத்தமம். சாயா கிரகங் களான ராகுவும் கேதுவும் 6-6-2011 முதல் 2-ல் கேதுவும்; 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்ப வாழ்வில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். என்றாலும் பெரிய கெடுதல்கள் இல்லை. ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமான சனி பகவான் 15-11-2011 வரை 6-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகளும் லாபங்களும் உயர்வுகளும் உண்டாகும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். சனி பகவான் 15-11-2011 முதல் 7-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் குடும்பத்தி லுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் உத்தமம்.
ஆரோக்கியம்
உங்களின் உடல்நலனில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டு மறையும். மனைவி வழியிலும் சின்னச் சின்ன உடல்நலக் குறைவுகள் ஏற்படும். புத்திர வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறையும். சிலருக்கு உஷ்ணத் தொடர்புள்ள நோய் ஏற்பட்டு விலகும்.
பொருளாதார நிலை
பொருளாதார வளர்ச்சியில் தன வரவு திருப்தியாக இருக்காது. பழைய கடன்கள் சற்று குறையும். வழக்கு, விவகாரங்களில் இழுபறியான நிலையே காணப்படும். சொத்து வகையில் லாபம் இராது. அரசு வகையில் அனுகூலம் இராது.
குடும்பம்
கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். உறவினர், நண்பர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் தாமத பலனை உண்டாக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உங்களது வருமானம் மிகவும் குறையும். தேவைக்குத் தகுந்த அளவில் மிகவும் கடினமாக உழைக்க நிர்ப்பந்தங்கள் ஏற்படும். தொழில்ரீதியாக வீணான அலைச்சல்கள் அதிகமாகும். உயர் அதிகாரிகள் ஆதரவு சற்று குறையும். பதவி உயர்வு உரிய நேரத்தில் கிடைக்காது.
தொழிலாளர்களுக்கு:
முதுகெலும்பு உடைய உழைத்தாலும் வேலைப் பளுதான் கூடுமே தவிர காரியம் ஆகாது. பல அதிருப்தியான நிகழ்வுகளே உண்டாகும். எதிலும் நிதானம் தேவை. சோதனைகள் உண்டா வதைத் தவிர்க்க முடியாது. அதிகாரிகளின் கெடுபிடியும் கடன் வாங்கும் சூழ்நிலையும் அமையும்.
பெண்களுக்கு:
திருமண முயற்சிகள் தடை, தாமதம் கொடுக்கும். குடும்பத்தில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். புத்திர வழியில் புதுப்புதுச் செலவை உண்டாக்கும். பிறரிடம் இரவல் நகை வாங்குவது கூடாது. பணிபுரியும் பெண்களுக்கு சில சங்கடங்கள் தோன்றி மறையும்.
கலைஞர்களுக்கு:
புதிய ஒப்பந்தங்கள் மேலும் மேலும் ஏற்பட்டாலும் உங்கள் மனதில் நிறைவு காணப்படாது. உழைப்பிற்குரிய சாதகமான பொருள் சேர்க்கையும் உண்டாகாது. ரசிகர்களின் ஆதரவும் குறையும். அரசு வழியில் கிடைக்கக்கூடிய விருது கிடைக்கத் தடை, தாமதம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
எதிர்பார்க்கும் விளைச்சல் இருக்காது. மகசூலில் பெரிய நஷ்டம் உண்டாக இடமுண்டு. அரசு வழியில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை உண்டாகும். புன்செய் மகசூல் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காது. ஆழ்கிணறு தோண்டுவதைத் தவிர்க்கவும்.
இளைஞர்களுக்கு:
வேலை வாய்ப்புகளில் தடை, தாமதம் உண்டாகும். தன வரவுகள் ஓரளவு கிடைக்கப் பெறும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளிவட்டாரப் பழக்கத்தில் நிதானம் தேவை.
மாணவர்களுக்கு:
நீங்கள் மிகவும் கவனமாக இருங்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. அவர்களால் நற்பலன் இராது. அதிக தூரப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். விளையாட்டுப் போட்டி களில் தடை உண்டாகும்.
குரு அஸ்வினி நட்சத்திரத்தில் கேது சாரத்தில்
8-5-2011 முதல் 17-7-2011 வரை சஞ்சாரம்
உங்களின் உடல்நிலை பாதிக்கும். புத்திர வழியில் மனக் குழப்பத்தையும் வீண் செலவையும் உண்டாக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையில்லாத அலைச்சல் டென்ஷனை உண்டாக்கும். அரசு வழியில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சிகள் தடைப்படும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப வாழ்வில் முழு நிம்மதி இருக்காது. புதிய கடன்கள் எதிர்பாராத வகையில் தோன்றும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலை ஏற்படுத்தும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.
குரு பரணி நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
18-7-2011 முதல் 30-8-2011 வரை சஞ்சாரம்
உங்களின் தேகநலன் சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் சண்டை, சச்சரவுகளும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியிலும் சிறிது மன வருத்தங்கள் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மனஉரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும்போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். நண்பர்கள், உறவினர்கள் ஓரளவு அனுகூலமாக அமைவார்கள். புதுமுயற்சியில் நிதானம் தேவை.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்கள் தேக ஆரோக்கியம் சுபிட்சமாகக் காணப்படும். எடுத்த காரியம் எல்லாவற்றிலும் ஏற்றத்தையும் உயர்வினையும் கொடுத்த படியே இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் அதிக சந்தோஷம் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமையுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங் களை வாங்கக்கூடிய யோகமும் ஏற்படும். பொருளாதாரரீதியாக எதிர்பாராத வரவுகள் தொடர்ந்து உண்டாகி பூரிக்கச் செய்திடும். கொடுக்கல்- வாங்கல் அமோகமாக இருக்கும். செல்வங்களும் செல்வாக்குகளும் மிக அற்புதமாகவே இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் சாதகமாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அமையும்.

26-12-2011 முதல் 2-3-2012 வரை சஞ்சாரம்
உங்களின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவை தவிர்க்க முடியாது. உங்கள் நண்பர்களும் உறவினர்களும் பகையாக மாறு வார்கள். எனவே எதிலும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். சிலர் கடல்கடந்து வெளிநாடு செல்லும் அமைப்பு; மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஜீவனம் செய்யக்கூடிய நிலையும் உண்டாகும். மற்றும் சிலருக்கு ஸ்தல தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும். காரியங்களை வேகமாகச் செயல்படுத்த முடியாது. பொருள் விரயம், புத்திர வழியில் செலவு, தொழில்ரீதியாக மாறுதல், கூடுதல் பணி, குறைந்த ஊதியம் போன்ற சங்கடங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளுக்குத் தடை ஏற்படும் நிலை உண்டாகும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும் நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்
உங்களுக்கு உடல்நிலைகளில் பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஓரளவுக்கு குறைந்து காணப் படும். உத்தியோகத்தில் அதிகமான நற்பலன்களைக் கொடுத்தாலும் அதை அனுபவிக்க முடியாது. கணவன்- மனைவி இடையே சிறிது ஒற்றுமைக் குறைவு உண்டாகும். அசையா சொத்து வகையில் செலவைக் கொடுக்கும். அரசு வழியில் உதவிகள் தாமதப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் உறவினர்களால் இடையூறு உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. செய்கின்ற தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. கலைஞர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் எதிலும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.
குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன் சாரத்தில்
3-5-2012 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம்
உங்களின் தேகநலன் சுமாராகவே இருக்கும். புத்திர வழியில் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமையில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். அரசு வழியில் உதவிகள் தாமதத்துடன் கிடைக்கப் பெறும். பெரிய முதலீட்டில் புதிய தொழிலை சிறிது காலம் தள்ளி தொடங்கலாம். கூட்டுத் தொழிலினால் பல சங்கடமான நிலைகளையும் மேற்கொள்ள நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனத்துடன் செயல்பட்டால்தான் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காது. கலைஞர்கள் சுமாரான தன வரவைப் பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் மறைந்து ஓரளவு ஏற்றம் உண்டாகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபார நிலையில் சற்றே சாதகமான நிலை காணப்பட்டாலும் பெரிய தொகைகளை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களின் கல்வியில் கடின உழைப்பு தேவை. குடும்பத்தில் கடன் தொல்லைகள் சற்று குறையும். கலைஞர்களின் பெயர், புகழ் சுமாராகவே இருக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
பொருளாதாரரீதியில் படிப்படியான பண வரவுகள் உண்டாகும். சில சமயம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பிறருக்கு வாக்குறுதி தருவது, ஜாமீன் தருவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் நெருங்கியவர்களிடம் கவன மாக இருக்க வேண்டும்.
கிருத்திகை 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
உடல்நலம் சற்று பாதிப்படையும். குடும்பத்தில் ஜீவனரீதியாக சிறுசிறு சங்கடங்களை ஏற்படுத்தும். மாணவர்கள் முழு கவனத்துடன் படித்தால் உயர்வினை அடைய முடியும். அலைச்சல், டென்ஷன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தாமதித்து வரும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
அதிர்ஷ்ட தேதி: 5, 14, 23; 9, 18, 27.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட நிறம்: ஆழ்சிகப்பு.
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட கல்: பவளம்.
அதிர்ஷ்ட தெய்வம்: முருகன்.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்யவிருப்பதால் தொடர்ந்து குரு பகவானுக்கு பரிகாரங்கள் செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற ஆடையும் கொண்டைக் கடலையால் செய்த மாலையையும் சாற்றி அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றுவது உத்தமம். 6-6-2011 முதல் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிக்க இருப்பதால் ராகு- கேதுவுக்கு பரிகாரம் செய்வது, சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் 8-5-2011 முதல் 17-5-2012 வரை சஞ்சாரம் செய்யவுள்ளார். இந்த குரு சஞ்சாரத்தால் பண வரவுகளில் திருப்தியான நிலை இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சர்ப்ப கிரகங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் 6-6-2011 முதல் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்துகொள்வதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்வதும் உத்தமம். உங்கள் ஜென்ம ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் 15-11-2011 வரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அதன் பின்னர் 6-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் ஓரளவுக்கு மறைந்து படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் மற்ற எல்லா முயற்சிகளிலும் வெற்றியினைப் பெறு வீர்கள். பெரிய அளவிலான முதலீடுகள் செய்யும் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்:
உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே காணப்படும். மனைவி மற்றும் பிள்ளைகள் நலமும் சீராகவே இருக்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். சிலருக்கு வயிற்றுக் கோளாறு, கால்களில் காயம் போன்றவை ஏற்படலாம். பெரிய கெடுதல் இருக்காது.
பொருளாதார நிலை:
பொருளாதார வகையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பழைய கடன்கள் ஓரளவு குறையும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது ஜாமீன் கொடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது உத்தமம். வெளிவட்டாரப் பழக்க- வழக்கம் ஓரளவு நற்பலனைக் கொடுக்கும்.
குடும்பம்:
கணவன்- மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்; கெடுதல் இருக்காது. பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நெருங்கிய உறவினர்களின் உதவியால் சமாளிப்பீர்கள். நண்பர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் புதிய முயற்சிகளை சிறிது தள்ளி வைப்பது உத்தமம்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோகத்தில் வேலைப் பளு கூடினாலும் வருமான உயர்வு ஏற்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பில் தாமதமான பலன் ஏற்படும். அதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்துப் போனால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்; சிலருக்கு பணி நிரந்தர மாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் உண்டாகும்.
தொழிலாளர்களுக்கு:
தொழிலில் வேலைப் பளு சற்று குறையும். உடல்நலம் படிப்படி யாகத் தேறும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன நிம்மதி உண்டாகும். தொழிலாளி- முதலாளி இடையே சிறிது ஒற்றுமை குறையும். கூட்டுத் தொழில் ஓரளவு லாபம் உண்டாக்கும்.
பெண்களுக்கு:
உங்கள் தேகநலம் சீராகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமத பலனை உண்டாக்கும். புத்திர வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். தாய் வழியில் நற்பலன் கிடைக்க தடை, தாமதம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு:
மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நல்ல தரமான வாய்ப்புகள் தாமதித்து அமையும். வருமானம் திருப்தியாக இருக்காது. இசைத் துறையில் சிலர் புகழ் பெறுவர். ரசிகர்களின் ஆதரவு சுமாராகவே இருக்கும்.
விவசாயிகளுக்கு:
விளைச்சல் சுமாராகவே இருக்கும். புழு, பூச்சிகளால் தொந்தரவு ஏற்படும். கால்நடைகளால் ஓரளவு அனுகூலம் ஏற்படும். பெரிய அளவிலான விவசாயப் பணிகளை சிறிது காலம் கழித்து தொடங்கினால் நற்பலன் ஏற்படும்.
இளைஞர்களுக்கு:
மற்றவர்களுக்கு நீங்கள் வாக்குறுதி கொடுப்பது நல்லதல்ல. படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க தடை ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் உடன்பிறப்பு வழியிலும் சக நண்பர்கள் வகையிலும் உதவியும் ஒத்துழைப்பும் இருக்கும்.
மாணவர்களுக்கு:
மாணவர்கள் கல்வியில் சற்று முன்னேற்றம் அடைவார்கள். மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சியில் சிறிது தாமதம் ஏற்படும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது நிதானம் தேவை.

உங்களின் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சிலருக்கு தாய் வழியில் சில உபாதைகள் உண்டாகி, பின்னர் நலமடையும். உறவி னர்கள் வருகையால் சற்றே நற்பலன்களும் எதிர்பார்த்த உதவியும் கிட்டும். வெளிவட்டார பழக்கத்தின் மூலம் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும்; நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கும். அசையா சொத்துகளின்மேல் செலவுகள் ஏற்பட்டாலும் லாபமாகவே ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகவே இருக்கும். வியாபாரம் நன்றாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு சற்று மந்தமான நிலை ஏற்பட்டாலும் கெடுதியில்லை. மாணவர்களின் கல்வி சீராகவே நடைபெறும். கலைஞர் களுக்கு போதிய வாய்ப்புகள் மூலம் தன வரவுகள் இருக்கும்.

இக்காலத்தில் சற்று சோதனையான பலன்களை உண்டாக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். மனைவி மற்றும் புத்திர வழியிலும் செலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மூலமும் செலவுகள் உண்டாகும். சமயத்தில் நண்பர்கள் உதவி கிட்டாது. பழைய கடன்கள் தொல்லை தரும். வியாபாரத்தில் மந்த மான நிலை நீடித்து பொருள் தேக்கமும் பண வரவுகளில் தடை, தாமதமும் உண்டாகும். கூட்டுத் தொழிலில் மனக் கவலைகள் தோன்றும். செய்யும் தொழிலிலும் சரிவர கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டு உற்பத்தி குறையும். மாணவர்களுக்கு கல்வியில் கடுமை யாக உழைக்க வேண்டியிருக்கும். திருமணம் போன்ற சுப காரியங் களில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு தடையாகும். பயணங் களில் நற்பலன் ஏற்படாது; எச்சரிக்கை தேவை.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
இக்காலத்தில் சுமாரான பலன்களே உண்டாகும். உடல் நிலையில் சிற்சில உபாதைகள் ஏற்பட்டு அடிக்கடி தொல்லைகள் தரும்; ஆனால் கெடுதி ஏற்படாது. பண வரவுகள் சகஜமாகும். கூட்டுத் தொழிலில் சற்று கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் சிறப் பாகவே நடைபெறும். லாபம் சற்று சுமாராகவே இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல்கள் ஏற்படாது. குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு திருப்திகரமாகவே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தடையின்றி நடைபெறும். மாணவர்கள் கவனத்துடன் கல்வி கற்றால் சிறப்பான மதிப்பெண்களைப் பெற முடியும். விவசாயிகளுக்கு சுமாரான விளைச்சல் ஏற்படும்.

இக்காலத்தில் உங்களின் கஷ்டங்கள் யாவும் குறைந்து நன்மை உண்டாகும். உடல்நலம் சிறப்பாகவே அமையும். உடல் உபாதைகள் நீங்கி புதுப்பொலிவுடன் திகழ முடியும். மனைவி, குழந்தைகள் சிறப் பான நலத்துடன் காணப்படுவார்கள். புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும். உறவினர்கள் வருகையால் நற்பலனும் உதவியும் ஏற்படும். நண்பர்கள் மூலம் புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் சிறப்பாகவும் லாப கரமாகவும் நடைபெறும். வியாபாரம் அபிவிருத்தி அடையும். சுபகாரியங்களில் இருந்த இடையூறுகள் உடனடியாக விலகி சுபமாக நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் களைப் பெற்று தாய்- தந்தையரைப் பெருமைப்படுத்துவார்கள். கலைஞர்களுக்கு அசையா சொத்து சேரும். புதிய வாய்ப்புகளும் ஏற்படும்.

உங்கள் தேகநலன் ஓரளவு சுமாராகவே இருக்கும். உஷ்ண சம்பந்தமான சில கோளாறுகள் ஏற்பட்டு மறையும். புத்திரர்கள் வழியில் மருத்துவச் செலவுகள் குறையும். மனைவி உடல் நலம் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் உதவி கள் கிட்டும். வரவுகள் ஓரளவு ஏற்பட்டு மனத் திருப்தி உண்டாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறு பாடுகள் நிலவினாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. செய்யும் தொழிலில் சற்று முன்னேற்றமான நிலை தென்படும். கூட்டுத் தொழில் சுமாராக நடந்து லாபம் ஏற்படும். வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை நிலவும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவு சற்றே குறையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ள நேரிடும். கலைஞர்கள் ஒப்புக்கொண்ட படவாய்ப்பு களை மந்தமாகவே செயல்படுத்துவார்கள்.

உங்களின் உடல்நிலையில் உபாதைகள் உண்டாகும். தேவை இல்லாத அலைச்சல்களும் அவசியமில்லாத பொருட்செலவுகளும் ஏற்படும். புத்திரர், மனைவி வழியிலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உறவினர்களின் வருகையால் செலவுகளும் கலகமும் ஏற்படும். வண்டி வாகனங்களும் பழுது அடைந்து செலவு தரும். அசையா சொத்துகளின்மேல் செலவுகள் ஏற்படும். தொழில்ரீதியாக போராட்டங்களும் சமாளிக்க முடியாத நஷ்டமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கடன்கள் தொல்லை தரும். அதிக முதலீடுகளையும் புதிய முயற்சிகளையும் கைவிடுவது உத்தமம். மாணவர்கள் மந்தமான நிலையில் காணப்படுவார்கள். விவசாயிகளுக்கு பயிர் நன்றாக விளையாது. அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் சற்று குறையும்.
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
குடும்ப வாழ்வில் சந்தோஷம் குறையும். அடிக்கடி கருத்து வேறு பாடுகள் உண்டாகும். புத்திரர்களால் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எந்த புதிய முயற்சியிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததைவிட லாபம் குறையும். அரசியல் வாதிகள், மாணவர்கள் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு தொழிலில் நிம்மதிக் குறைவு, பொருளாதாரரீதியில் சோதனைகள் உண்டாகும். பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறிது பாதிக்கும். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். பெண்கள் எதிர்பார்க்கும் சுப காரியத்தில் தடை, தாமதம் ஏற்படும். எந்தக் காரியத்தையும் தடையுடன் எதிர்கொள்ள நேரிடும். எதிலும் மிகவும் கவனமாகச் செயல்படுவது உத்தமம்.
மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
செய்யும் தொழிலில் போட்டி, பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு ஏற்படுவதால் சேமிக்க முடியாது. புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் நிதானம் தேவை. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளில் கவனமாகச் செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
அதிர்ஷ்ட தேதி: 7, 10, 16, 18, 24.
அதிர்ஷ்ட கிழமை: புதன், சனி.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை.
அதிர்ஷ்ட கல்: வைரம்.
அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: லட்சுமி.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால், வியாழக்கிழமைகளில் விரத மிருந்து குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி, நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வது- ஏழை அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது. இதுவரை 8, 2-ல் சஞ்சரித்த ராகு- கேது வரும் 6-6-2011 முதல் ஜென்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் சஞ்சரிக்க இருப்பதால் அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது, சர்ப்பசாந்தி செய்வது உத்தமம்
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், நகைசுவை உணர்வுடனும் செயல்படக் கூடிய மிதுன ராசி நேயர்களே! பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் வரும் 8-5-2011 முதல் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் மறையும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார்- உறவினர் களிடையே இருந்த பகைமை விலகி ஒற்றுமை பலப்படும். எதிரி களும் நண்பர்களாக மாறுவார்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை முதலீடு செய்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். இதுவரை 1, 7-ல் சஞ்சரித்த கேது- ராகு மாறுதலாகி 6-6-2011 முதல் ராகு 6-ஆம் வீட்டிலும் கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும்; வரும் 15-11-2011-ல் உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கும் அர்த்தாஷ்டமச் சனி முடிவடைந்து விடுவதும் சாதகமான அமைப்பு என்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறுவர். அசையும்- அசையா சொத்து சேர்க்கை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.
ஆரோக்கியம்:
உங்கள் தேக ஆராக்கியம் மிகவும் அற்புதமாகக் காணப்படும். உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் வெற்றியும் மனமகிழ்ச்சியும் தரும் சம்பவங்களும் நடைபெறும். புத்திர வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாட செயல்களில் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். தொலைதூரப் பயணங்கள் மூலம் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
பொருளாதார நிலை:
உங்களுக்கு பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளி வந்த கடன் பைசல் ஆகும். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். பொருளாதார வகையில் தன்னிறைவும் சேமிப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பான நற்பலன்களைக் கொடுக்கும்.
குடும்பம்:
கணவன்- மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புதிய சொத்துகளின் சேர்க்கை உண்டாகும். மேலும் பெண்களுக்கு சகோதர வழியில் பொருள் வரவும் தன வரவும் உண்டாகும். சிலருக்கு தாய் வழியில் சொத்து சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகையால் தன லாபம் ஏற்படும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
அதிகாரிகளின் ஆதரவும் ஊழியர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துவிடும். சுப காரியத்திற்கு அரசு வழியில் பெரும் தொகை கடனாகப் பெறுவீர்கள். தனியார் துறையில் உத்தியோகம் செய்பவர்களுக்கு உத்தியோகத்தில் மேலும் மேலும் சுபிட்சம் உண்டாகும். அதுமட்டுமின்றி, பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் யாவும் உண்டாகும்.
தொழிலாளர்களுக்கு:
உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்றுவிடக் கூடிய சூழ்நிலைகள் உருவாகிவிட்டன. சிலர் இக்காலத்தில் புதிய வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பாராட்டுதல்களையும் புகழையும் பெறுவீர்கள். சில சத்ருக்களை வீழ்த்த உங்களிடம் இக்காலத்தில் நல்ல மனோதிடம் காணப்படும்.
பெண்களுக்கு:
உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். மனதில் தெளிவு ஏற்படும். திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமணம் ஆகும். படித்த பெண் களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே வேலைக்கு முயற்சி எடுக்கவும். குடும்ப வாழ்வு சந்தோஷம் கொடுக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாக்கும்.
கலைஞர்களுக்கு:
அதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலமாகும். தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
விவசாயிகளுக்கு:
நன்செய் மகசூல் நல்ல செழிப்பை ஏற்படுத்தும். அரசு வழியில் உதவிகளும் கடன் சலுகைகளும் கிடைக்கும். உங்கள் புகழ் பெருகும். உங்கள் திறமை குன்றின் மேலிட்ட விளக்காய் ஒளிரும். பொருளாதாரம் நல்ல உயர்வு பெறும்.
இளைஞர்களுக்கு:
உங்களுக்கு பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் மூலம் நற்பலன் உண்டாகும். பொருள் வரவு மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். மணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
மாணவர்களுக்கு:
கல்வியில் மேன்மையான பலன் கிடைக்கும். மாணவர்கள் வெற்றி கரமான காரியங்களைச் செய்து சாதனை செய்திடுவர். குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். பொருளாதாரம் வங்கி சம்பந்தப்பட்ட துறையினை எடுத்துப் படிப்பவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தொழிலில் ஏற்றமான நிலை உண்டாகும். தெய்வ வழிபாடு, ஸ்தல தரிசனம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். தொழில்ரீதியாக தொடரும் காரியங் கள் வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு நன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். நண்பர்களுடன் நல்ல உறவும் யோகமான நிலையும் மேலோங்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். எதிர்பார்க்கும் சுபச் செய்தி மன மகிழ்வை உண்டாக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அபரிமிதமான நற்பலன்களைக் கொடுக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். அரசாங்க வழியில் அனுகூலங்கள் ஏற்படும்.

உங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் ஆற்றலையும் உண்டாக்கித் தரும். உங்களின் உடல் ஆரோக்கியம் மிகத் திருப்தி கரமாக அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக் கூடிய நிலைகள் ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகவே இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய சொத்து வாங்குகின்ற யோகமும் இக்காலத்தில் அமையப் பெறும். குடும்பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்களும் அபிவிருத்தியும் உண்டாகும். சிலருக்கு கைவிட்டுப்போன சொத்து சுகங்களும் கைவந்து சேரும். தெய்வ வழிபாட்டாலும் பெரியவர்களின் ஆதரவாலும் உயர்பலன் உண்டாகும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றி பெற்று நிறைய மதிப்பெண்கள் வாங்குவார்கள். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும்.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்களின் தேக நலன் சுமாராகவே காணப்படும். குடும்பத்தில் பொருள் வரவு வந்தாலும் விரயச் செலவுகள் கூடுதலாகும். சிலருக்கு கண் வியாதிகள் வரும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு குறையும். திடீர் கடன்கள் வாங்க நேரிடும். ஸ்திர சொத்துக்கள் வர தாமதமாகும். மாணவர்கள் வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்காது. சிலருக்கு அரசு வழியில் திடீர் சோதனைகளும் கெடுபிடிகளும் உண்டாகி மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்துப் போவது நல்லது. விவசாயி களுக்கு எதிர்பார்த்த விளைச்சல் இருக்காது. கணவரின் உடல்நலத்தில் பாதிப்பேற்படும். புதிய திட்டம், புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். ஸ்பெகுலேஷன் நற்பலன் தராது.

உங்களுக்கு எடுத்த காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் அடங்கும். சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் பெற்றோருக்கு நற்பெயரும் மதிப்பும் கூடுத லாகும். பிள்ளைப்பேறு எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். எந்தத் தொழில் தொடங்கினாலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு தூர தேசப் பயணமும் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் சில நற்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்வார்கள். கோர்ட், வழக்கு போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்பத்தில் சுப விரயம் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும்.

இக்காலத்திலும் உங்களுக்கு ஏற்றமான பலன்களை உண்டாக்கும். பொருளாதார ரீதியில் தனவரவும் பொருள் வரவும் அற்புதமாக இருக்கும். மனோ தைரியம் கூடும். சகோதரர், தந்தை வழியில் உதவிகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் புதுப் பதவி கள் வந்து நிலைமையை உயர்த்தும். எதிரிகளின் தொல்லை குறைந்து உங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு அரசு கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உத்தியோக ரீதியாக திடீரென்று சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறும். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். குடும் பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாகவே இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அபரிமிதமான லாபத்தை உண்டாக்கும். புது முயற்சிகள் வெற்றி தரும்.

எல்லா வகையிலும் ஏற்றமும் வெற்றியும் உண்டாகும். உங்க ளுக்கு இந்த காலம் நன்மைகள் அதிகம் கொடுக்கும். கடல் கடந்த பயணமும் சிலருக்கு உண்டாகும். பூமி சேர்க்கை, மனை சேர்க்கை எதிர்பாராமல் ஏற்படும். மாணவர்கள் முதன்மையாக வெற்றி பெறுவதுடன் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். சகோதர வழியில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சியான உறவுகள் உண்டாகும். சுப காரியத்திற்கு மற்றவர்களிடம் பொருள் பெறும் நிலை உண்டு. உத்தியோகஸ்தர்கள் சுபிட்சமான பலன் பெறு வார்கள். எதிர்பாராமல் திடீர் திடீரென்று பொருள் வரவாகும். வியாபாரிகள் அபரிமிதமான லாபத்தைப் பெற்றிடுவார்கள். அரசு ஊழியர்கள் மிக சுபிட்சமான பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு சொத்து வகையில் லாபங்கள், தொழில் ரீதியில் சாதகமான சூழ்நிலைகள், நண்பர்களால் பெரிய நன்மைகள், அரசு வழியில் அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை நிறைந்திடும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்கும். சுப காரியங்கள் சிறப்பாகக் கைகூடும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
தேக நலன் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத தன வரவு உண்டாகி மனமகிழ்வை ஏற்படுத்தும். திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள் இனிதே நடைபெறும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பையும் பெருமையையும் கொடுக்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். புது முயற்சியில் ஏற்றம் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
இக்காலத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். இல்வாழ்வில் நிம்மதி கொடுக்கும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும். எண்ணிய எண்ணம் கைகூடும். சிலருக்கு தொலைதூரப் பயணமும் அதனால் நற்பலனும் மேலோங்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட் ராக்ட் போன்றவற்றில் அற்புதமான நற்பலன்களை உண்டாக்கும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி: 4, 5, 9, 14, 18, 23.
அதிர்ஷ்ட கிழமை: புதன், வெள்ளி, ஞாயிறு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை.
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட கல்: மரகதப் பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: விஷ்ணு.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை வாரி வழங்கினாலும், வரும் 15-11-2011 வரை அர்த்தாஷ்டமச் சனி தொடருவதால் நீங்கள் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்குப் பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது, கறுப்பு நிற வஸ்திரம் சாற்றுவது உத்தமம். ஆஞ்சனேயரை வழிபாடு செய்வதன் மூலமும் வாழ்வில் வளம் பெருகும்
கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
நல்ல அழகும் அறிவாற்றலும் கற்பனைத் திறனும் கொண்ட கடக ராசி நேயர்களே! 8-5-2011-ல் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் 17-5-2012 வரை சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொடக்கத்தில் சனி 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றத்தை அடைந்துவிட முடியும் என்றாலும், 15-11-2011-ல் சனியும் 4-ஆம் வீட்டுக்கு மாறுதலாகி விடுவதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியும் தொடங்கிவிடுகிறது. இது எல்லா வகையிலும் பிரச்சினை களை ஏற்படுத்திவிடக்கூடிய அமைப்பாகும். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை முதலீடு செய்ய நினைக்கும் காரியங்களை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே நற்பலனை அடைய முடியும்.
ஆரோக்கியம்:
உங்களின் தேகநலன் சீராகவே இருக்கும். மனைவி வழியில் சிறுசிறு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டு விலகும். புத்திர வழியில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து காணப்படும். மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். சிலருக்கு நீர் தொடர்புள்ள நோய்கள் ஏற்பட்டு மறையும்.
பொருளாதார நிலை:
பண வரவு பெருகும் என்றாலும் பொருளாதார வகையில் நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிவரும். புதிய பொருள் சேர்க்கையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி என்ற நிலையைக் கொடுக்காது. மற்றவருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பழைய கடன்கள் வசூலாகும்.
குடும்பம்:
கணவன்- மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவதால் நன்மை உண்டாகும். உறவினர்கள் வருகையால் ஓரளவு அனுகூலும் இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். புத்திர வழியில் சுபச் செலவைக் கொடுக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
அதிகாரிகளின் கெடுபிடிகளும் வேலைப் பளுவும் கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆறுதலைத் தரும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். புதுமுயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வு தாமதப்படும். புதிய பணி தகுதிக்குக் குறைவானதாக அமையும்.
தொழிலாளர்களுக்கு:
உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் சிறிது வெற்றி யினைத்தான் ஏற்படுத்தும். உங்கள் அபிலாஷைகள் பூர்த்தி அடையும். நடுவில் சில சங்கடங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்காது. இதனால் புதிய கடன்கள் உருவாகும்.
பெண்களுக்கு:
புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. கணவன்- மனைவி உறவு சுமாராகவே இருக்கும். பணி புரியும் பெண்களுக்கு வேலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
கலைஞர்களுக்கு:
சிறப்பான வாய்ப்புகள் சற்று தாமதித்து வரும். எதிரிகளின் போட்டி, பொறாமைகள் மறையும். படத்தயாரிப்பு துறை, இசைத் துறையில் உள்ளவர்களுக்கு ஓரளவு நன்மை உண்டாகும். தொலை தூரப் பயணங்களில் அதிக அலைச்சல், டென்ஷன் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
விளைச்சல் நன்றாக இருந்தாலும் பண வரவு திருப்தி தராது. மறைமுக எதிர்ப்புகள் சற்று குறையும். எதிர்பார்க்கும் தகவல்கள் அனுகூலப் பலனை தாமதித்து தரும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புது முயற்சியைத் தவிர்க்கவும்.
இளைஞர்களுக்கு:
எதிலும் கவனமாகச் செயல்படுவதன்மூலம் எதிர்ப்புகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். சக நண்பர்கள் மூலம் வீண் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலமாகும்.
மாணவர்களுக்கு:
மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஆர்வம் குறையும். பெற்றோர், ஆசிரியர்கள் கண்டிப்பாக நடப்பதால் வருத்தம் அடையாமல் அதை அறிவுரையாக ஏற்பது வெற்றி தரும். தேவையற்ற அலைச் சலைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் பணப் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதால் குழப்பத்திலிருந்து விடுபட முடியும். புதிய முயற்சிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். மாணவர்களின் கல்வியில் மந்தமான நிலை காணப்படும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு சற்று குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயிகளுக்கு விளைச்சல் சோதனையை ஏற்படுத்தும். பெண்கள் எதிர்பார்க்கும் சுப காரியத்தில் தடை தாமதம் உண்டாகும்.

உங்களின் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். சிலருக்கு நீர் தொடர்புள்ள சில உபாதைகள் ஏற்பட்டு மறையும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு அன்பு டன் காணப்படும். உறவினர்களின் வருகை நன்மை தரும். செய்யும் தொழிலில் உங்களின் திறமையால் எதையும் சமாளித்து அனுகூலப் பலன் அடைய முடியும். கூட்டுத் தொழில் சிறக்கும். உத்தியோகஸ்தர் களுக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைத்து, ஏற்றமான பதவி உயர்வும் உண்டாகும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை சிரமப்பட்டு நிறைவேற்றுவார்கள். மாணவர்களின் கல்வியில் மந்த நிலை விலகி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாரான பலனையே ஏற்படுத்தும். புது முயற்சியில் நிதானம் தேவை.
குரு வக்ரகதியில் 31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்களுக்கு சிறப்பான காலமாகவே இருக்கும். குடும்பத்தில் பூரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தொழில் செய்வோருக்கு மிகவும் பிரமாதமான வர்த்தக வளர்ச்சியினைக் கொடுக்கும் கால மாகும். போட்டி, பொறாமை எதுவும் ஏற்படாமல் சிறப்பான முன்னேற்றம் அடைய முடியும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, பெருமை சிறப்பாகக் காணப்படும். எதிரிகளும் நண்பர்களாகி உங்களுக்கு உதவி புரிவார்கள். திட்டமிட்ட காரியத்தை செயல் வடிவமாக்கி அற்புதப் பலன்களையும் பெற முடியும். வெளியூர் பயணங்கள் மூலம் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு பூர்வீகச் சொத்து சேரும் அமைப்பு உண்டாகும். சிலர் பழைய வண்டி வாகனத்தை விற்றுவிட்டு புதிதாக வாங்குவார்கள். வழக்கு களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும். உடன்பிறந்த சகோதரி வழியில் சிலருக்கு சுபகாரியம் சுபமாக முடியும்.

உங்கள் உடல்நலம் சீராகவே காணப்படும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். பொருளாதார நிலையில் ஓரளவு சிறப்பு காணப்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பெண்களுக்கு உடல்நலம் தேறும். வியாபாரம், கூட்டுத் தொழிலில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் தாமதித்து அமையும். புதிய திட்டங்களை மெதுவாக- சிறப்பாக செயல்படுத்தினால் வெற்றி கிட்டும். மாணவர்கள் சிறப்பான கல்வி மூலம் ஏற்றம் பெற முடியும். அரசியல்வாதிகளும் கொடுத்த வாக்கை கஷ்டப்பட்டாகிலும் காப்பாற்றி பெருமை அடைவார்கள். விவசாயிகளுக்கு கடன்கள் சற்று குறையும்.

எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். குடும்பத்தில் மன அமைதி குறையும். கொடுக்கல்- வாங்கலில் சங்கடத்தை ஏற்படுத்தும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டாகும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் அநேக தடைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் விரும்பிய இட மாற்றம் கிடைக்காது. அசையா சொத்துகள் சேர தாமதம் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் மந்த நிலை நிலவும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறையும்; அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசியல்வாதி களுக்கு நெருக்கமானவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் குறைவாகவே இருக்கும். வெளிவட்டார பழக்க- வழக்கத்தால் சாதகமான பலன் இருக்காது.

உங்களுக்கு கடந்தகால சோதனைகள் படிப்படியாகக் குறைந்து அனுகூலமான பலன்கள் உண்டாகும். தேகநலன் சுமாராகவே இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பொருளா தார ரீதியில் பண வரவுகளில் இருந்த தடை நீங்கி வரவுகள் வர ஆரம்பிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். விவசாயிகளுக்கு தக்கசமயத்தில் விளைச்சல் உதவும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர் களுக்கு நிலைமை சற்று சீரடையும். அரசியல்வாதிகளுக்கு சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நிலை ஏற்பட்டு புகழ், பெருமை கூடும். பெண்களுக்கு புத்திர வழியில் வீண் மனக் குழப்பம் ஏற்பட்டு விலகும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர் பார்த்த லாபம் இருக்காது.
புனர்பூசம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
தேகநிலை சுமாராகத்தான் இருக்கும். எடுத்த காரியங்கள் யாவுமே சுபமாக முடிவடையும். நல்லவரை நண்பர்களாக ஆக்கிகொள்ளக் கூடிய முயற்சி யாவுமே நற்பலனைக் கொடுத்திடும். உற்றார்- உறவினர் களால் தொல்லை ஏற்படும். கடன் தொல்லைகள் சற்று குறையும். கூட்டுத் தொழிலில் அனுசரித்துச் செல்வது நல்லது. புது முயற்சியில் நிதானம் தேவை.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
தேக நலன் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. குடும்பத்தில் வரவுக்குத் தகுந்த செலவு ஏற்படும் என்பதால் சேமிக்க முடியாது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். பெண்கள் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
தேக நலனில் சிறிது பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சீராகவே இருக்கும். புத்திர வழியில் வீண் செலவைக் கொடுக்கும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நற்பலன் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தராது. பெண்கள் எதிர்பார்க்கும் சுபகாரியம் தடைப்படும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி : 2, 11, 20, 29.
அதிர்ஷ்ட கிழமை: திங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை.
அதிர்ஷ்ட கல்: முத்து.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாசலபதி.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்தியைத் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் நெய் தீபமேற்றி வழிபடுவது, ஏழை- எளிய அந்தணர்களுக்கு உதவிகள் செய்வது உத்தமம். 15-11-2011 முதல் சனி 4-ல் சஞ்சரிக்கவுள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறவுள்ளது. இதனால் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்
சிம்மம்(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! கடந்த சில ஆண்டுகளாக ஏழரைச் சனி நடைபெறுவதால் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வரும் உங்களுக்கு, வரும் 8-5-2011-ல் ஏற்படவிருக்கும் குருப் பெயர்ச்சியால் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புத அமைப்பாகும். குடும்பச் சூழ்நிலை யானது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். தடைப்பட்ட மங்கள கரமான திருமண சுப காரியங்கள் இனிதே தடபுடலாக நிறை வேறும். சிலர் அழகான பிள்ளைச் செல்வத்தையும் பெறுவர். பணப் புழக்கம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலிலும் நல்ல லாபமும் பல பெரிய மனிதர்களின் நட்பும் கிட்டும். வெளிவட்டார பழக்க- வழக்கங்கள் விரிவடையும். வரும் 15-11-2011-ல் உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஏழரைச் சனியும் முழுமையாக முடிவ டைந்து விடுவதால் உங்களது துன்பங்கள் அனைத்தும் பகல வனைக் கண்ட பனிபோல விலகும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம், பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை யாவும் மிகச் சிறப்பாக அமையும்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் உண்டாகிய மருத்துவச் செலவுகள் மறையும். உங்கள் வலிமையும் வளமும் கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பூர்வீகச் சொத்து கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் மகிழ்ச்சி உண்டாகும்.
பொருளாதார நிலை:
பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவையும் சேமிப்பையும் உண்டாக்கும். பழைய கடன்கள் அடைபடும். வழக்கு விவகாரங் களில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். சொத்து வகையில் லாபங்களும் அரசாங்க வகையில் அனுகூலங்களும் தனரீதியில் சாதகமான பலன்களும் உண்டாகும்.
குடும்பம்:
கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை காணப்படும். எதிர்பாராத சாதனை செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் பூரிப்பைக் கொடுக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமும் அரசு வழியில் ஆதாயமும் கிடைக்கக்கூடும். புதிய முயற்சி வெற்றியைக் கொடுக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
திட்டமிட்ட செயல்கள் மூலம் சிறப்பான சாதனை செய்வீர்கள். வேலைப் பளு குறையும். அதிகாரிகளின் பாராட்டும் சக ஊழியர் களின் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் உத்தியோக நிலையில் மிகவும் சிறப்பான பதவி உயர்வு, ஊதிய உயர்வுகளும் அமையப் பெறும். கௌரவமான பதவிகளையும் சிலர் அடை வார்கள். வெளியூர் பயணம் ஏற்றம் தரும்.
தொழிலாளர்களுக்கு:
தொழில்ரீதியாக இருந்து வந்த போட்டி, பூசல்கள் யாவும் விலகி மிகவும் உயர்வான நற்பலன்கள் உண்டாகும். அதிக முதலீடு செய்து தொழிலை துணிந்து விரிவுபடுத்தலாம். வெற்றியும் லாபமும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும்.
பெண்களுக்கு:
குடும்பத்தில் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். உறவினர் வருகை யால் மன நிம்மதி உண்டாகும். எதிர்பார்க்கும் தகவல் நற்பலனை அளிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும்.
கலைஞர்களுக்கு:
வருமானம் நன்றாக இருக்கும். புதிய புதிய வாய்ப்புகள் கிடைக் கும். உங்களின் பெயர், புகழ் கூடும். ரசிகர்களின் ஆதரவும் இருக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களால் லாபமும் பொருள் வரவும் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
எதிர்பார்த்த விளைச்சல் ஏற்றத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த உதவிகள் பெறுவீர்கள். அதனால் பல திட்டங்கள் நிறைவேறும். விவசாயத்திற்குத் தேவையான நவீன கருவிகள் வாங்குவீர்கள். விளை பொருட்கள் சிறப்பான விலைக்குப் போவதால் உங்களது கடன் உடனடியாக விலகும்.
இளைஞர்களுக்கு:
வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தன வரவுகள் தாராள மாகக் காணப்படும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஏற்றமும் உயர்வும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியும்.
மாணவர்களுக்கு:
கல்வியில் நல்ல ஊக்கமும் உற்சாகமும் உயர்ந்த மதிப்பெண்களும் பெற்று, பெற்றோர் மற்றும் ஆசிரியர் பாராட்டையும் பெறுவீர்கள். மேற்கல்வி முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். சிலருக்கு அரசு உதவி பெற்று வெளியூர், வெளிநாடுகளில் தங்கிப் படிக்கும் யோகம் அமையும்.

உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கொடுக்கக்கூடிய காலமாகும். உங்களின் கௌரவம், புகழ் யாவும் கூடும். புத்திரர்கள் வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்குதல், வீடு மாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பரிபூரண வெற்றியைக் கொடுக்கும். உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாகக் காணப்படும். உங்கள் சகோதரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசு வழியில் உதவிகள் திடீரென்று அமையப் பெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் சிறப்பாகக் கைகூடி மனமகிழ்வை ஏற்படுத்தும். மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்பேறு கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் ஏற்படும். கூட்டுத் தொழில் யோகம் கொடுக்கும்.

இக்காலமும் உங்களுக்கு சிறப்பான பலன்களை உண்டாக்கும். உங்களின் வலிமை, வல்லமை யாவும் சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறையும். உங்களுக்கு வெற்றிகள் குவிந்தபடியே இருக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவு முதலீடுகளைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறு வார்கள். புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்த அளவுக்குமேல் இருக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். கலைஞர் களுக்கு சிறப்பான வாய்ப்புகளால் அற்புதமான தன வரவுகள் உண்டாகும்.

உங்கள் தேக ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. எதிலும் அமைதியற்ற போக்கும் அலைச்சலும் உண்டாகும். குடும் பத்தில் கணவன்- மனைவி இடையே வீண் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். எடுத்த காரியத்தில் தடையினை ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் பட வாய்ப்பு கிடைக்காது. மாணவர்களின் கல்வியில் ஈடுபாடு குறையும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு தோன்றி பிரிவினை உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் குறையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் மன நிம்மதி குறைந்து காணப்படும்.

உங்கள் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதார ரீதியில் உயர்வுகள், புதிய முயற்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் அமைப்பும் உண்டாகும். அரசு மூலம் வெகுமானம் கிட்டும். ஒரு நல்ல குறிக்கோளுக்காக புண்ணிய ஸ்தலப் பயணமும் மேற் கொள்ளும் அமைப்பு ஏற்படும். வியாபார சம்பந்தமான வெளி நாட்டுப் பயணமும் ஏற்படும். சுக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் யாவும் வீட்டில் நிறைந்திடும். குடும்ப வாழ்வில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் மிக அன்னியோன்ய நிலை அமையப் பெறும். புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும் காலமாகும்.

உங்களின் தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். உங்களுக்கு செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவி சாதகமாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். குடும் பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் அமையப் பெறும். புதிய தொழில் இக்காலத்தில் தொடங்கலாம். எடுக்கும் காரியத்தில் வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகி மன மகிழ்வை ஏற்படுத்தும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு கள் மிகவும் நன்றாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும் மேன்மையும் உண்டாகும். நண்பர்கள் வகையில் சகாயமும் முன்னேற்றமும் உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறையில் இருப்போர் சுபிட்சமான நற்பலன்களைப் பெறுவார்கள். விவசாயத்தில் லாபம் பெருகும்.

உங்களின் தேகநிலை சிறப்பாகவே இருக்கும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப் பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன்- மனைவி ஒற்றுமை அற்புதமாகவே இருக்கும். பிள்ளை களால் பூரிப்பும் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்கு கிடைக்கும். பொருளாதாரம் எந்த வழியிலாவது பெருகும். வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சமான்களும் வண்டி வாகனங்களும் அமையும். கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற தொழில் செய்வோருக்கு லாபம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும். உறவினர், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பொருள் சந்தையில் பெயர், புகழ் பெறும்; லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி கிடைக்கப் பெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்; குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உருவாகும். கொடுக்கல்- வாங்கல் யோகம் கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவர்.
பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உடல்நிலை சிறப்பாகவே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி புகழ் பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். அரசியல்வாதிகளின் புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பெருகும். சுப காரியங்கள் நினைத்தபடியே கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும்.
உத்திரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் தேகநலன் நன்றாகவே இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தேடிவந்து அமையும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சிறப்பாக கைகூடும். பெண்களின் அபிலாஷைகள் யாவும் பூர்த்தி அடையும். மாண வர்கள் கல்வியில் வெற்றிமேல் வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் லாபம் அடைவார்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி : 1, 10, 19, 28.
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
அதிர்ஷ்ட கல்: மாணிக்கம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன்.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் சாதகமாக சஞ்சரித்தாலும், வரும் 15-11-2011 வரை ஏழரைச் சனி தொடருவதால் சனி பகவானுக்கு சனிக் கிழமைகளில் கறுப்புநிற வஸ்திரமும் நீல நிற சங்குப் பூக்களும் சாற்றி, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. ஆஞ்சனேயரை வழிபடுவதும், ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் உத்தமம்
கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
பிறரின் குணம் அறிந்து அதற்கேற்றார்போல் வளைந்து கொடுத்து வாழக்கூடிய கன்னி ராசி நேயர்களே! வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அனு கூலமற்ற அமைப்பாகும். இதனால் பண வரவுகளில் பலவகையில் நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள்கூட தாமதப்படும். நன்றாகப் பழகியவர்கள்கூட ஏதாவது உதவி கேட்பீர் களோ என ஒதுங்கிக் கொள்வார்கள். குரு சாதகமின்றி சஞ்சரிப்பது மட்டுமின்றி உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடருவதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சி களில் தடைகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் தடை, தாமதங்களையே சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கூட்டாளி களின் ஒற்றுமை யற்ற செயல்பாட்டால் அபிவிருத்தியும் குறையும். உத்தியோகஸ்தர் களுக்கு பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் மன உளைச்சலை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் உத்தமம்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. சிலருக்கு வயிற்றுக் கோளாறு, சரியான உறக்கமின்மை போன்ற அனுகூலமற்றப் பலனைக் கொடுக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தில் மனைவிக்கு உடல்பாதிப்பு உண்டாகும். மன சந்தோஷம் குறைந்திடும். எதிலும் எச்சரிக்கை தேவை.
பொருளாதார நிலை:
பணப் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்தி கொடுக்காது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். உங்களால் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. புதிய செலவுகள் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்து வகையில் செலவுகள் அதிகரிக்கும்.
குடும்பம்:
கணவன்- மனைவி இடையே ஒற்றுமை குறையும். அலைச்சல் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் தோன்றி மறைந்திடும். குடும்பத்தில் எந்த காரியமும் நடைபெறாமல் இழுபறியாகவே செல்லும். ஸ்திரச் சொத்து இழப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோக நிலையில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் காணப் படும். வேலைக்கேற்ற உயர்வினை அடையமுடியாது; தடை உண்டாகும். மன அமைதி குறையும். உடல்நலம் பாதித்து அடிக்கடி விடுப்பு எடுத்து பணியில் கவனம் குறையும். புதிய வேலை வாய்ப்பு அமையாது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் யாவும் உண்டாகும்.
தொழிலாளர்களுக்கு:
தகுந்த முதலாளி அமைந்தாலும் பல நிலைகளில் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். வேலை பாரமும் கூடும். சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மை ஏற்படும். பொருளாதாரத் தட்டுப்பாடும் காணப்படும். புதிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
பெண்களுக்கு:
பணிபுரியும் பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டாக தடை உண்டாகும்.
கலைஞர்களுக்கு:
வெளியூர் வாய்ப்புகள் பொருளாதாரரீதியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை உண்டாகப் பெறும். கடுமையான போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும்.
விவசாயிகளுக்கு:
விளைச்சல் நன்றாகவே இருந்தாலும் பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாத நிலை உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவி, புதிய முயற்சிகள் கை கூடாமல் ஏமாற்றம் தரும். பெரிய விவசாயப் பணிகள், கிணறுகள் தோண்டுவது, போர் அமைப்பது போன்ற வற்றைத் தவிர்க்கவும்.
இளைஞர்களுக்கு:
அனுகூலமான வேலையில் இருக்கும் உங்களுக்கு எதிர்பாராத சிக்கல் மூலம் தற்போது உள்ள நிலையில் பிரச்சினை உண்டாகும். நெருங்கிப் பழகியவர்கள் மூலம் வீண்பழி உண்டாகும். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய காலம் இது.
மாணவர்களுக்கு:
படிப்பின்மீது கவனம் செலுத்தினால் பாராட்டு கிடைக்கும். வெளியில் அதிகம் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மதிப் பெண்கள் திருப்திகரமாக இருக்காது. விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

இக்காலத்தில் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படவே செய்யும். நீர்தொடர்புள்ள கோளாறுகள் ஏற்படும். பொருளாதார வரவில் மந்தமான நிலையே காணப்படும். செய்யும் தொழிலில் வேலை ஆட்களுக்கும் உங்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை பாதிக்கும். கூட்டுத் தொழிலில் பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்திலும் லாபம் குறையும். உங்கள் வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படும். எதிரிகளின் பலம் கூடும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எவ்வித நற்பலனும் அமையாமல் வயல்களை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். மாணவர்களின் கல்வியில் மிகவும் மந்த மான நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடி உடல்சோர்வுடன் காணப் படுவார்கள்.

இக்காலத்தில் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டாது. சகோதர வழியில் சோதனைகளும் கருத்து வேறுபாடு களும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத தன விரயம், செலவு உண்டாகும். புத்திரர்களின் வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் அதிகரிக் கும். எடுக்கும் எந்த முயற்சியுமே தடையுடன் முடிவடையும். சுப காரியங்கள் குடும்பத்தில் ஏற்பட தடை உண்டாகும். புதிய முயற்சி களிலும் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்திலும் அதிகாரி களால் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கடினமாக உழைப்பதன் மூலம் மதிப்பெண்களைப் பெற முடியும். குடும்பத்தில் கணவன்- மனைவி உறவு ஒற்றுமை குறைந்து காணப்படும். புதிய விவசாயிகளுக்கு கடன்கள் தொல்லை தரும்.

இது பெரிய யோகம் கொடுக்கும் காலம் என்று கூறமுடியாது. தொழில்ரீதியாக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தொழிலாளர் களும் வேலை ஆட்களும் தேவையில்லாமல் பிரச்சினை செய் வார்கள். பொருளாதார பற்றாக்குறையினால் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கடன் பிரச்சினை அதிகரிக்கும். குடும்ப வாழ்விலும் கணவன்- மனைவி இடையே கருத்து வேறு பாடும் சண்டையும் உண்டாகி மன அமைதி குறையும். வியாபாரம் மந்தமாகவே நடைபெறும். கொடுக்கல்- வாங்கலிலும் சிக்கல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் கூடி உங்கள் பலம் குறையும். எனவே அரசியல்வாதிகள் புது முயற்சியைத் தவிர்ப்பது உத்தமம். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கும்.

உங்கள் தேகநலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனைவி, குழந்தைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் உண்டாகும். தொழிலாளர்களுக்குள் பகை, கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். வியாபாரத்தில் நன்றாக ஈடுபட முடியாத சில சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டில் அமைதி குறைந்து காணப் படும். கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி வாய்த் தகராறு செய்ய நேரிடும். குழந்தைகளால் அக்கம்பக்கத்தில் வீண் வாக்கு வாதங்கள் நிகழும். எதிலும் மிகவும் கவனமாகவும் மிகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதால் வீண் விரயம், வீண் விரோதத்தை சற்று குறைக்கலாம். உத்தியோகத்தில் நிம்மதி இருக்காது. மாணவர்களின் ஆர்வம் கல்விமேல் செல்லாது.

இக்காலத்திலும் தேக ஆரோக்கியம் பாதிப்பை உண்டாக்கும். புத்திர வழியிலும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெண்களால் சிலருக்கு கெடுபலன்கள் அதிகரிக்கும். செய்யும் தொழி லில் போட்டி, பொறாமைகள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைச் சற்று தள்ளிப் போடுவது உத்தமம். கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும். உறவினர் களால் பகை ஏற்படும். பெண்களுக்கும் உடல் உபாதைகள் உண்டாகும். அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிக்கிட நேரும். அதனால் புகழ், கௌரவம் குறையும். மாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவும். விவசாயிகளுக்கு கடன்களால் தொல்லையும் பகைவர்களால் விரோதமும் ஏற்பட்டு மனக்கவலை உண்டாகும்.

இக்காலத்தில் தேக ஆரோக்கியம் பாதிக்கும். உஷ்ண சம்பந்த மான நோய்கள் ஏற்படும். உடல் சோர்வும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். புதிய கடன்கள் ஏற்படும். சுப காரியம் நடைபெற பல்வேறு இடையூறுகள் உண்டாகும். செய்யும் தொழில் ரீதியாக அலைச்சலும் டென்ஷனும் உண்டாகும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு நிலவும். மனதில் பயம், வீண் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் கெடுபிடியும், தெரியாத இடத்திற்கு மாற்றமும் உண்டாகும். பெண்களுக்கு மனசஞ்சலம் ஏற்படும். புத்திர வழியில் மனக்கவலை ஏற்படும். அரசியல்வாதிகளின் கௌரவம் குறையும். மாணவர்கள் சற்று மந்தமாகக் காணப்படுவார்கள். கலைஞர்கள் உற்சாகம் குறைந்து காணப்படுவார்கள். விவசாயிகளுக்கு மகசூலில் திருப்தி யற்ற நிலை நிலவும்.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
தொழில்ரீதியாக அலைச்சல், டென்ஷன் உண்டாகும். போட்டி, பொறாமையும் நெருக்கடிகளும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களில் இடையூறுகள் ஏற்படும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை குறையும். கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
தேகநலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகரிக் கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் புதுமுயற்சியைத் தவிர்ப்பது நல்லது. கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. பெண் களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் நிறைந்திருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கல் ஏற்படும்.
சித்திரை 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது- ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் இவற்றில் லாபங்கள் குறைந்து விரயம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையும். கலைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் கை நழுவும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி: 5, 9, 14, 18, 23, 27.
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய், புதன்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட கல்: மரகதம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு.
அதிர்ஷ்ட தெய்வம்: விஷ்ணு.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வியாழக் கிழமைதோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலையும், மஞ்சள் நிற பூக்களும் சாற்றி நெய் தீபமேற்றுவது உத்தமம். ஏழரைச் சனியும் தொடரு வதால் சனிக்கு எள் எண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்யவும். முடிந்தால் சனிக்கு பரிகார ஸ்தல மான திருநள்ளாறு சென்று வருவதும் நல்லது
துலாம்(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
பிறருடைய குணங்களைத் தெளிவாக எடை போடக் கூடிய துலா ராசி நேயர்களே! உங்களுக்கு ஏழரைச் சனியால் தேவையற்ற பிரச்சினைகளும் சோதனைகளும் இருந்தாலும் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகாவன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவில் இருந்த பற்றாக் குறைகள் விலகும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொன்பொருள் சேர்க்கைகளும், சிலருக்கு ஆடை, ஆபரணம் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். பூமி, மனை, வண்டி, வாகன சேர்க்கைகளும் ஏற்படும். 6-6-2011-ல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 2-லும் கேது 8-லும் சஞ்சரிக்க இருப்பதால், குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தைக் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் கௌரவமான உயர்வுகள் கிட்டும். வெளி யூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய யோகமும் உண்டாகும். சனி துலா ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோக காரகன் என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது என்றாலும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்தகாலத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் நலமும் ஆரோக்கியமாகவே இருக்கும். உங்களின் சோதனைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.
பொருளாதார நிலை:
கொடுக்கல் – வாங்கலில் நன்மை ஏற்படும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் உண்டாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகி பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத் தில் சில அனுகூலப் பலன்கள் பொருளாதாரரீதியாக உண்டாகும்.
குடும்பம்:
கணவன் – மனைவி ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எதிரி களின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உறவினர்களும் நண்பர் களும் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கடன் தொல்லைகள் மறையும். எதிர்பாராத காரிய சாதனைகளைச் செய்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
பெரிய அதிகாரிகளின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகி பூரிப்பை ஏற்படுத்தும். அடிக்கடி பயணங்கள் உண்டாகி அனுகூலமும் ஆதாயமும் மேலோங்கும். வேலைக்கு முயற்சி செய்தால் நல்ல நிலையான வேலை கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு:
பழைய கடன்கள் பைசலாகும். அரசு சலுகைகள் உதவிகள் எதிர் பார்த்த வண்ணம் கிடைக்கும். வேலை இதுவரை இல்லாதவர் களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கட்டிட துறையில் இருப்போருக்கு தொடர்ந்து வேலை செய்யும் யோகம் கிட்டும். இதனால் தன வரவு அதிகமாகும்.
பெண்களுக்கு:
உங்களுக்கு சாதகமான காலமாகும். குரு பலம் மிகவும் பிரமாத மாக உள்ளது. எனவே நீங்கள் திருமண முயற்சியில் ஈடுபடலாம். கணவன் மற்றும் உற்றார் – உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்கப் பெறும். புத்திர வழியில் சந்தோஷமும் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும்.
கலைஞர்களுக்கு:
அதிர்ஷ்ட தேவதை உங்களை நோக்கி வரக்கூடிய காலம் வந்துவிட்டது. தொழில்ரீதியாக மீண்டும் எழுச்சி மேலோங்கும். வீடு, வண்டி, வாகனம் போன்றவை வாங்கும் உன்னதமான அமைப்பு ஏற்படும். மக்கள் ஆதரவு கிடைக்கும். அரசாங்க வழியில் நற்பலன் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
நன்செய் மகசூலில் நல்ல செழிப்பு ஏற்படும். ஆழ்கிணறு எடுப்பது மூலம் ஜலப் பிராப்தி கிடைக்கப் பெறும். கால்நடை சேர்க்கை மூலம் தன வரவு சிறப்பாக இருக்கும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். பழவகை, பருத்தி பயிர் செய்வோருக்கு நல்ல வருமானம் கிடைக்கப் பெறும்.
இளைஞர்களுக்கு:
உங்களுக்கு பொருள், தன வரவில் மிகவும் திருப்தியான நிலை ஏற்படும். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் சாதகமான பலனைத் தரும். சிலருக்கு அசையா சொத்து வாங்கும் யோகம் ஏற்படும்.
மாணவர்களுக்கு:
கல்வியில் இருந்த மந்தநிலை நீங்கி நல்ல முன்னேற்றம் அமையப் பெறும். கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். அதிக மதிப் பெண்கள் பெற்று பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் பாராட்டு பெறும் அமைப்பு உண்டாகும். அரசு வழியில் கணிச மான உதவியை சிலர் பெறும் நிலை உண்டாகும்.

உங்களுக்கு எல்லா விதத்திலும் மேன்மையையும் அனுகூலத் தையும் உண்டாக்கித் தரும். உங்கள் உடல் ஆரோக்கியம் மிக திருப்திகரமாக இருக்கும். தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக்கூடிய நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன் – மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணமாகாத வர்களுக்கு திருமணம் கைகூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறப்பான சாதனை புரிவார்கள். கலைஞர்கள் சிறப்பான வாய்ப்புகளால் நல்ல தன வரவைப் பெறுவார்கள். அரசியல்வாதிகள் கௌரவமான பதவிகள் பெறுவார்கள். விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.

உங்கள் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். உங்கள் மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வுகள் கைகூடும். இல்லத்தில் புத்திரப் பேறு உண்டாகி மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு உயர் அதிகாரி, அமைச்சர் போன்ற பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். குடும்பத்தில் கணவன் – மனைவி ஒற்றுமை பெருகும். தொழில்ரீதியாக பெரிய அளவில் முதலீடு செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். கூட்டுத் தொழில், கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் அபரிமிதமான பலன்களை உண்டாக்கும். நண்பர்கள், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்களின் தேகநலனில் கவனம் தேவை. குடும்ப வாழ்வில் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை குறையும். தேவையில்லாத அலைச்சலையும், டென்ஷனையும், விரயத்தையும் உண்டாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாகச் செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியில் பற்றாக் குறைகள் ஏற்பட்டு அதனால் புதிய கடன்கள் வாங்கும் நிலையும் உண்டாகும். அரசு வழியில் கெடுபிடிகள் அதிகம் உண்டாகும். அரசாங்க ஊழியர்களுக்கு விருப்பமில்லாத மாற்றத்தைக் கொடுக்கும். கூட்டுத் தொழிலில் சங்கடங்களும் பொரு ளாதார நெருக்கடியும் உண்டாகும். எந்த புதிய முயற்சியும் தோல்வி யைக் கொடுக்கும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் முயற்சிகள் பரிபூரண வெற்றியை உண்டாக்கித் தரும். வாழ்வில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகமாகும். தேக ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் அபரிமிதமான செல்வச் சேர்க்கை உண்டாகும். சோதனைகள் குறையும். அரசாங்க வகை யில் உதவி மற்றும் ஆதரவுகள் பெருகும். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு நன்றாக இருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். தொழில்ரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இட மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு தூர தேசப் பயணங்கள் அமையும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகைகள் சிலருக்கு திடீரென்று வந்துசேரும். மாணவர்களில் சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிட்டும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றமான பலன்களை ஏற்படுத்தும்.

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றமும் உயர்வும் உண்டாகும். உங்கள் செல்வம், செல்வாக்கு, புகழ், பெயர், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன் – மனைவி உறவு கலகலப்பாகக் காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றோர்களுக்குக் கிடைக்கும். பொருளாதாரம் பல்வேறு வகையில் பெருகும். மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து பரிசுகளைப் பெறுவர். கொடுக்கல் – வாங்கல் அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை அற்புதமாகவே அமையும். சிலருக்கு ஸ்திர சொத்துச் சேர்க்கை உண்டாகும்.
குரு கிருத்திகை நட்சத்திரத்தில் சுக்கிரன் சாரத்தில்
3-3-2012 முதல் 2-5-2012 வரை சஞ்சாரம்
இக்காலத்தில் உங்களின் தேகநிலை அற்புதமாக இருக்கும். திடீர் பண வரவு ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை காணப்படும். மன நிம்மதியும் மகிழ்ச்சியான நிலையும் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் யாவும் குறையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். நெருங்கிய உறவினர் களால் நன்மை ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் அதனால் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கும். மாண வர்கள் ஏற்றமான நிலைகளில் காணப்படுவார்கள். அரசியல் வாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் விரும்பிய செயல்கள் ஈடேறும்.
சித்திரை 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் சிறப்பாகக் கை கூடி மன மகிழ்வை ஏற்படுத்தும். கொடுக்கல் – வாங்கல் யோகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தரும். வியாபாரத்தில் பெரிய அளவு முதலீடுகளைப் பயன்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தன வரவினால் மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
தேகநிலை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் – மனைவி ஒற்றுமை பெருகும். புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாக்கும். பெண்கள் நினைத்த காரியம் வெற்றியைக் கொடுக் கும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஏற்பட்டு உற்பத்தி பெருகும். கலைஞர்களின் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான சாதனை புரிவார்கள். அரசியல் வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
எடுக்கும் காரியம் யாவும் வெற்றிமேல் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்தில் தன வரவும் பொருள் வரவும் சிறப்பாகவே இருக்கும். பெண்களுக்கு சுப காரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை யோகம் கொடுக்கும். அரசியல்வாதிகளின் செல்வம், செல்வாக்கு கூடும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8.
அதிர்ஷ்ட கிழமை : புதன், சனி.
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.
அதிர்ஷ்ட தெய்வம் : முருகன், ரங்கநாதர்.
பரிகாரம்:
இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால், வியாழக் கிழமைகளில் விரதமிருந்து தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரமும், மஞ்சள் நிறப் பூக்களும் சாற்றி அர்ச்சனை செய்வது நல்லது. சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது மிகவும் உத்தமம். ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது
விருச்சிகம்(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
எந்தவொரு காரியத்திலும் இருவிதமான ஆதாயங்களை அடைய நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே! குரு பகவான் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகள், வம்பு, வழக்குகளை சந்திப்பீர்கள். முற்பாதியில் சனி 11-ஆம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் காரியங்களிலும் வெற்றி கிட்டும். 6-6-2011-ல் ஏற்படவிருக்கும் சர்ப்பகிரக மாற்றத்தால், ராகு ஜென்ம ராசியிலும் கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளனர். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளும், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். இது மட்டுமின்றி, 15-11-2011 முதல் உங்களுக்கு ஏழரைச் சனியும் தொடங்கவுள்ளது. இதனால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவதும், தொழில், வியாபாரம் போன்றவற்றில் புதிய முயற்சிகளில் கவனமுடனிருப்பதும் உத்தமம். உத்தியோகஸ்தர் களுக்கு தேவையற்ற இடமாற்றமும் வீண்பழிச் சொற்களை சுமக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலிலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். மனைவி, பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கும். கவனமாக இருக்கவும். உங்கள் குடும்பத்தில் மனைவியின் உடல்நிலையும் பாதிக்கும். வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சரியான உறக்கமில்லாத நிலைகள் உண்டாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது உத்தமம்.
பொருளாதார நிலை:
சரிவும் சங்கடமும் பெருகிக் காணப்படும். எதிர்பார்க்கும் தகவல்களில் அனுகூலமற்ற பதிலை அடைவீர்கள். முயற்சிகள் சாதகமற்று எதிர்மறைப் பலன்களை உண்டாக்கும். கொடுக்கல் – வாங்கலைத் தவிர்ப்பது உத்தமம். புதிய கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.
குடும்பம்:
கணவன் – மனைவி இடையே சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும். சந்தோஷம் இருக்காது. வீண் வாதங்களும் பிடிவாதங்களும் சங்கடத்தைக் கொடுக்கும். கடன் தொல்லை ஏற்படும். புத்திர வழியில் வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். புத்திரர்களால் குடும்பத்தில் ஒரு நன்மையும் ஏற்படாது.
உத்தியோகஸ்தர்களுக்கு:
எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நெருங்கியவர்களிடம் எச்சரிக்கை தேவை. மேலதிகாரிகளின் ஆதரவுகள் குறையும். எப்போது பார்த்தாலும் கடுகடுப்பாகக் காணப்படுவீர்கள். உடல்நலமும் ஒத்துழைக்காது. வேலை தேடுபவர்களுக்கு நிலையான வேலை அமையாது.
தொழிலாளர்களுக்கு:
செய்கின்ற தொழிலில் திடீர் சரிவு, மந்த நிலை உண்டாகும். எதிலும் நிதானமாகவும் முன்எச்சரிக்கையுடனும் செயல்படுபவதன் மூலம் வரக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். புது முயற்சிகள் தடையுடன் நிறைவேறும்.
பெண்களுக்கு:
உடல்நலம் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகளும் பித்த சம்பந்த மான நோயும் தோன்றிடும். இதனால் மருத்துவச் செலவுகள் இருக்கும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்வில் நிம்மதி இருக் காது. கணவன் – மனைவி ஒற்றுமை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியம் நடைபெற தடை, தாமதம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு:
உங்களுக்கு தொழிலில் கடும் போட்டி உண்டு. அதை மிகவும் எளிதாக முறியடிக்கும் வல்லமையும் பெற்றிருப்பீர்கள். செல்வம், செல்வாக்கு சுமாராகவே இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் புகழ் சற்று குறையப் பெறும். பொதுவாக எதிர்நீச்சல் போட்டு ஏற்றம் பெறும் அமைப்பைப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு:
உங்களுக்கு விளைச்சல் குறைவாக இருக்கும். சிலருக்கு விவசாயக் கருவிகள் பழுது அடைந்து அதன்மேல் பண விரயம் உண்டாகும். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகள் தடையுடன் வெற்றி கொடுக்கும். புழு, பூச்சி தொல்லையால் பயிர்ச் சேதம் உண்டாகும்.
இளைஞர்களுக்கு:
தாழ்வான நிலை என்றாலும் எதிர்காலப் பலன்கள் நன்றாக இருக்கும். சோதனையைக் கண்டு அஞ்சாதீர்கள். பெரிய வாய்ப்பு களால் உயர்வு கிடைக்காது. வாய்ப்புகள் இருந்தால் சிறு வேலை யாக இருந்தாலும் எதிர்காலத்தில் நல்ல நிலையை அடைய முடியும்.
மாணவர்களுக்கு:
கவ்வியில் ஆர்வம் குறையும். கடின உழைப்பினை மேற்கொண் டால் ஓரளவு சாதகமான பலனை அடைய முடியும். தேர்வுகளில் மதிப்பெண்களை கஷ்டப்பட்டு பெறும் நிலை ஏற்படும். பெற்றோர், ஆசிரியர்கள் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.

உங்களின் தேகநலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புத்திர வழியிலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சி குறையும். எடுத்த காரியம் நிறைவேற கடுமையான முயற்சிகள் கையாளப்பட வேண்டும். சுறுசுறுப்பும் உண்மையான உழைப்பும் கொண்டவர்கள் ஓரளவு கஷ்ட நிலைமையைச் சமாளிப்பீர்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின்னோக்கியே இழுக்கும். உத்தியோகம் மற்றும் குடியிருக்கும் இல்லத்தில் இருந்து வெளியேறி வேறு இடம் செல்லும் நிலை உண்டாகும். சக ஊழியர்களின் மனிதாபிமானமற்ற நடத்தைகளும் வஞ்சக சூழ்ச்சிகளும் கவலையை உண்டாக்கும். எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும்.

உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். மருத்துவச் செலவுகள் சிறிது குறைந்து காணப்படும். நிறைய பொருள் வரவு வந்தபடியே இருக்கும். செலவுகள் ஏற்பட்டபடியே இருக்கும். இதனால் சிறிது பற்றாக்குறையும், கடன் வாங்குகின்ற நிலையும் உண்டாகும். குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது. காரியத் தடைகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் – மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புத்திர வழியில் செலவுகள் ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் சிறுசிறு தடையைக் கொடுக்கும். தொழில் ரீதியாக சிலருக்கு இட மாற்றம் உண்டாகும். தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் திருப்தியாக இருந்தாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்கள் உடல்நலம் அற்புதமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமைகள் யாவும் கூடுதலாகும். சுபகாரியம் செய்யும் முயற்சியில் பெரும் வெற்றியினைப் பெறுவீர்கள். சிலருக்கு பிள்ளைப் பேறு ஏற்படும். தொழில்ரீதியாக தூரப் பயணம் செல்லக் கூடிய அமைப்பும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு நல்ல அபிவிருத்தியும் மேன்மையும் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலில் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் லாபகரமாக இருக்கும். கலைஞர் களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் யாவும் உயரும்.

உங்களின் தேகநிலை பாதிக்கும். எதிர்பார்த்த தனவரவுகள் கைக்கு கிடைக்காமல் தாமத நிலை ஏற்படும். எதிலும் விரயமான நிலையும் மன அமைதியை பாதிக்கக் கூடியதாகவும் அமையும். உங்களுக்கு தொழில்ரீதியாகவும் பொருள்ரீதியாகவும் சிற்சில சங்கடங்களை உண்டாக்கிடும். கொடுக்கல் – வாங்கலில் சில சிக்கல்களை ஏற்படுத் தும். கணவன் – மனைவி இடையே வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு மறையும். வெளியூர் பயணங்கள் அனுகூலத் தைக் கொடுக்காது. திருமணம் போன்ற சுபமான நல்ல காரியங்கள் யாவும் தள்ளிப்போகும். நண்பர்களும் உறவினர்களும் பகைவர் களாக மாறும் நேரம் என்றால் மிகையாகாது. மாணவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்.டு படித்தாலும் கல்வியில் ஏற்றம் பெற முடியாத நிலையினை உண்டாக்கும். கலைஞர்கள் தற்போது பெரிய பெரிய போட்டிகளைச் சந்திக்கின்ற நிலையைப் பெறுவார்கள்.

தேக ஆரோக்கியம் பாதிக்கும். உங்களுக்கு வீணான அலைச்சல், உடன் இருப்பவருடன் விரோதம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பொருள் வரவில் மிகவும் மந்தமான நிலை ஏற்படும். கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு அதிகமாகி சண்டை, சச்சரவுகள் காணப்படும். வெளியூர் பயணங்கள், தேவையில்லாத அதிக அலைச்சலை உண்டாக்கும். எடுக்கின்ற காரியங்கள் யாவும் சற்று தாமதம், தடையுடன் முடிவடையும். கூட்டுத் தொழிலினால் அதிக சங்கடமும் பகைமையும் உண்டாகும். பொருள் வரவில் தட்டுப்பாடான நிலை ஏற்படும். ஸ்பெகுலேஷனால் தன விரயங்கள் ஏற்படும். மங்கையருக்கு சுபகாரியம் நடக்க தடை ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசு உதவிகள் கிடைக்க தாமதமாகும். மாணவர்கள் எவ்வளவு படித்தாலும் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியாது.

உங்கள் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும். மனைவியின் தேக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பொருள் வரவில் மந்தமான நிலைகளும் சிறுசிறு கருத்துவேறுபாடுகளும் சண்டை, சச்சரவு களும் உண்டாகியபடியே இருக்கும். புத்திர வழியினாலும் சிறிது மனவருத்தம் உண்டாகும். எதைக் கண்டும் அஞ்சாத மன உரம் வேண்டும். மாணவர்கள் எதையுமே தைரியமாகச் செய்ய வேண்டும். எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெற முடியும். எதிலும் ஈடுபடும் போது அதிக கவனம் தேவையாகும். சொந்த முயற்சியினால் படிப்படியான ஏற்றம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் சுமாரான நற்பலன்களையே ஏற்படுத்தும். கணவன் – மனைவி இடையே உறவு முறை சுமாராகத்தான் இருக்கும். தேவையில்லாத பயணத்தால் அலைச்சல்கள் வரும். கலைஞர்களும் மாணவர்களும் மிகவும் அக்கறையுடன் செயல்படுவது நல்லது.
விசாகம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களிள் தேகநலன் சிறிது பாதிக்கும். எடுக்கும் முயற்சியில் தடை, தாமதம் ஏற்படும். புத்திர வழியில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். பிறருக்கு வாக்குறுதி தருவதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் – மனைவி இடையே சுமாரான ஒற்றுமை நிலவும். பொருள் வரவில் மந்தநிலை இருக்கும். கூட்டுத் தொழிலில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். குடும்ப வாழ்வில் சிறிது மனநிம்மதிக் குறை ஏற்படும். பொருளாதாரரீதியாக தனவரவு திருப்தியாக இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகள் சிறிது தடை கொடுத்து வெற்றியைக் கொடுக்கும். அரசியல்வாதிகள், கலைஞர்கள் எதிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. மாணவர் களின் கல்வியில் மந்தநிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களது தேகநிலையில் சிறுசிறு பாதிப்புகளைக் கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டியும் பொருள் வரவில் மந்தமும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை. பெண்கள் நினைத்த காரியம் தாமத பலனைக் கொடுக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை லாபம் தராது. கூட்டுத் தொழில் சிறிது ஏற்றம் தரும். புது முயற்சியில் நிதானம் தேவை.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி : 5, 9, 14, 18, 23, 27.
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், புதன்.
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
அதிர்ஷ்ட கல் : பவளம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட தெய்வம் : முருகன்.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பாலாபிஷேகம் செய்வது, மஞ்சள் நிற வஸ்திரமும் பூக்களும், கொண்டைக் கடலை மாலையும் சாற்றி அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு, கேது 1, 7-ல் சஞ்சரிப்பதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம். 15-11-2011 முதல் ஏழரைச் சனி தொடங்கவுள்ளதால் சனிக்கு பரிகாரம் செய்வது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது
தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யும் நற்குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் சுபிட்சம், கணவன் – மனைவியிடையே ஒற்றுமை, புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறக் கூடிய அமைப்பு, திருமண வயதை அடைந்தவர் களுக்கு சுபகாரியம் கைகூடும் வாய்ப்பு, சிலருக்கு விரும்பியவரையே கை பிடிக்கும் யோகம் உண்டாகும். இதுவரை 1, 7-ல் சஞ்சரித்த ராகு கேதுவும் மாறுதலாகி 6-6-2011 முதல் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதன் மூலம் எந்தவித மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இதுமட்டுமின்றி, ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி பகவான் 15-11-2011-ல் மாறுத லாகி லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது வெற்றிமேல் வெற்றியினை உண்டாக்கக் கூடியதாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபமும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை நிலவிய சங்கடங்கள் விலகி கௌரவமான பதவிகளை வகிக்கும் ஆற்றலைப் பெறுவர். கொடுக்கல் – வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும்.
ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். கடந்தகாலத்தில் இருந்து வந்த சோம்பல் விலகும். வெளியூர் பயணம் மூலம் அனுகூலம் ஏற்படும். அன்றாடச் செயல்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனைவி வழியில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.
பொருளாதார நிலை:
பிறரிடம் கொடுத்த பணம் திரும்பி வந்து மனநிம்மதி ஏற்படும். எதிரிகள் நண்பர்களாக மாறும் நிலை ஏற்படும். கொடுக்கல் – வாங்கல் ரீதியாக இருந்த தடைநீங்கி பொருள் வரவு உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதாரரீதியாக உங்கள் வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
குடும்பம்:
குழந்தைகளால் குடும்பத்தில் ஒரு நல்ல முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் எதிர்பாராத மகிழ்ச்சி கரமான செய்தி கிடைக்கும். எடுக்கும் காரியத்தில் வெற்றி ஏற்படும். நினைத்த காரியம் கைகூடி சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் – மனைவி ஒற்றுமை அற்புதமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உங்களுக்கு வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக நண்பர் களின் உதவியால் தனச் சேர்க்கையும் உண்டாகும். சிலருக்கு வேண்டிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். அதனால் பதவி உயர்வு உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய நிலைகள் உண்டாகும்.
தொழிலாளர்களுக்கு:
உங்களுக்கு தொழில்ரீதியாக நற்பலன்களே மாறி மாறி உண்டாகும். ஊதிய உயர்வுகளும் போனஸும் கிடைக்கப் பெறும். தொழில்ரீதியாக எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எளிதாகச் சமாளிக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். முதலாளி – தொழிலாளி வேற்றுமை இருக்காது.
பெண்களுக்கு:
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் யாவும் விலகி குடும்பம் சுபிட்சம் அடையும். புத்திரர்கள் வழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் – மனைவி உறவு பலப்படும். உற்றார் – உறவினர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கப் பெறும்.
கலைஞர்களுக்கு:
புதிய வாய்ப்புகள் குவியும். அது உங்களை பூரிப்படையச் செய்யும். பாடல், நடிப்பு, இசை போன்ற துறைகளில் இருப்போர் நல்ல முன்னேற்றமான பலனை அடைவார்கள். பரிசும் பாராட்டும் கிடைத்திடும். வெளியூர் பயணங்கள் ஏற்றத்தினைக் கொடுத்திடும்.
விவசாயிகளுக்கு:
அமோகமான விளைச்சலைக் கொடுத்து அற்புதமான பலன்களை ஏற்படுத்தும். புன்செய் தானியங்கள் நல்ல லாபத்தை அளிக்கும். கால்நடை ஜீவன்களால் நல்ல செல்வ விருத்தியினை அடைவீர்கள். புது முயற்சி அனுகூலம் தரும்.
இளைஞர்களுக்கு:
உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் உண்டாகும். தன வரவும் பொருள் வரவும் சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்கத்தினால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகளில் வெற்றி உண்டாகும்.
மாணவர்களுக்கு:
மாணவர்களின் கல்வியில் வெற்றி உண்டாகும். புதிய நண்பர் களின் சேர்க்கை உங்களுக்கு கிடைக்கப் பெறும். பெற்றோர், ஆசிரி யர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலர் உயர்கல்வியை முன்னிட்டு வெளிநாடு செல்லும் அமைப்பைப் பெறுவார்கள்.

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாகவே இருக்கும். உங்கள் குடும்பத்தில் மற்றவர்களும் நலமாகவே காணப்படுவார்கள். பொருளாதாரரீதியாக தன வரவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவி இடையே ஒற்றுமை பெருகும். புத்திரவழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் சிறப்பாகக் கைகூடி மனமகிழ்வை ஏற்படுத்தும். வியாபாரிகளுக்கு சிறப்பாக வியாபாரம் நடைபெறும். மாணவ-மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். அனைவரது பாராட் டையும் கலைஞர்கள் பெறுவார்கள். பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ் தர்கள் எவ்விதமான இடையூறும் இன்றி வளமையுடன் காணப்படுவார்கள். விவசாயத்தில் லாபம் பெருகும்.

உங்களின் தேகநலன் சிறப்பாக இருக்கும். பொருளாதாரரீதியில் வரவுகள் சரளமாகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் மறையும். புத்திரர்கள் நலமுடன் காணப்படுவார்கள். மனைவி வழியிலும் ஆரோக்கியம் ஏற்படும். திருமணமாகாத ஆண் – பெண்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். வீடு, மனை, பூமி, வண்டி, வாகனமும் சிலருக்கு திடீரென்று அமையும். வியாபாரம் செழிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு உண்டாகும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு கள், ஆடை, ஆபரணச் சேர்க்கையும் தாய்வழியில் உதவிகளும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பானதொரு நிலையைப் பெற முடியும். கலைஞர்கள் புதிய பட வாய்ப்புகள் பெறுவார்கள்.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்களின் உடல்நலம் சீராகவே காணப்படும். பொருளாதார ரீதியில் தன வரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் ஏற்படும். கடன்கள் சிறிது சிறிதாகக் குறையும். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடமான நிலைகள் விலகி படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பொருள் தேக்கம் யாவும் மெதுவாக விலகும். குடும்பத்தில் திருமண காரியத் தடை சற்றே விலகி சுமூகமான முறையில் நடைபெறும். அரசியல்வாதிகளுக்கு சோதனைகள் யாவும் குறையும். கணவன் – மனைவி சண்டை சச்சரவு கள் விலகி புது மலர்ச்சி ஏற்படும். மாணவர்களின் மந்தமான நிலை மாறும். கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக சற்றே ஏற்றம் உண்டாகும். விவசாயிகளின் பயிர் பாதுகாக்கப்படும்.

உங்களுக்கு இக்காலத்தில் மிகவும் அற்புதமான பலன்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பம் ஆரோக்கியமாகவும் சுபிட்சமாகவும் திகழும். பொருளாதாரரீதியில் தன வரவு சிறப்பாகவே இருக்கும். அரசு வழியில் திடீரென்று உதவிகள் அமையப் பெறும். எடுத்த காரியம் யாவும் கைக்கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சிலருக்கு வண்டி, வாகனம் அமையும் யோகமும்; சிலருக்கு பழைய வீட்டைப் புதுப்பிக்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு மிகுந்த அன்புடன் காணப்படும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயிகளுக்கு கடன் சுமைகள் மறைந்து, உற்சாகம் ஏற்படும். செய்கின்ற தொழிலில் – வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும்.

உங்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் திருப்திகரமாக இருக்கும். எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். செய்யும் தொழில் சிறக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய சொத்து வாங்குகின்ற யோகமும் இக்காலத்தில் அமையப் பெறும். குடும்பத்தில் சுபிட்சமான நற்பலன்கள் ஏற்படும். வியாபாரம் அமோகமான லாபத்துடன் நடக்கும். சிலருக்கு கை விட்டுப்போன சொத்துகள் சேரும். புதிய முயற்சி கை கூடும். சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யமான அன்பு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு புகழ், பெருமை, கௌரவம் உண்டாகும். கொடுக்கல் – வாங்கல் நன்மை தரும். மாணவர்கள் கல்வி, விளையாட்டில் சிறப்பான சாதனை புரிவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சலால் லாபம் கூடும்.

உங்களுக்கு இக்காலத்திலும் அற்புதமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத பொருள் வரவுகள் திடீரென்று ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு கௌரவமிக்க உயர்பதவிகள் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கலில் நற்பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் இக்காலத்தில் மிகச் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் திடீர் தனச் சேர்க்கை, லாபம் போன்றவை ஏற்படும். குடும்பத்தில் சேமிப்பு நிலை பெருகும். கணவன் – மனைவி உறவு கலகலப்பாகக் காணப்படும். பிள்ளை களால் மகிழ்ச்சியும் நற்பெயரும் பெற்றவர்களுக்கு கிடைக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் தொழில் செய்வோருக்கு லாபம் ஏற்படும். கூட்டுத் தொழில் சிறப்படையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
இல்வாழ்க்கையில் குதூகலம் உண்டாகும். சரளமான பண நடமாட்டம் இருப்பதால் பூமி, மனை, ஆபரண யோகம் அமையும். தேகநிலை சிறப்பாகவே இருக்கும். வியாபாரம் செழிக்கும். மாணவர்கள் கல்வியில் ஏற்றமான பலனைப் பெறுவர். குடும்பத்தில் சுபகாரியம் கைகூடி வரும். உற்றார் – உறவினர்களால் அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும். புது முயற்சிகள் வெற்றி தரும்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் தேகநலன் அற்புதமாகவே இருக்கும். குடும்பத்தில் புத்திர வழியில் பூரிப்பும் பெருமையும் உண்டாகும். கொடுக்கல் – வாங்கலில் லாபம் பெருகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமை மறைந்து நல்ல ஏற்றம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் மேன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகு வதால் தன வரவு சிறப்பாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் கூடும்.
உத்திராடம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
குடும்பத்தில் பொருள் வரவு திருப்தி அளிக்கும். சிலருக்கு வேலை வாய்ப்பு நிரந்தரமாகக் கிடைக்கும். குடும்ப வாழ்வில் சந்தோஷம் உண்டாகும். செல்வம், செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் உயர்வு பெறுவார்கள். தொழில்ரீதியாக பெரிய முதலீடுகளைச் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். பெண்களுக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதிகள் : 3, 12, 21, 30.
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்.
அதிர்ஷ்ட கல் : புஷ்பராகம்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.
அதிர்ஷ்ட தெய்வம் : தட்சிணாமூர்த்தி.
பரிகாரம்:
இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு சாதகமாகச் சஞ்சரித்தாலும் வரும் 15-11-2011 முடிய சனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது, காக்கைக்கு தினமும் அன்னம் வைப்பது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்
மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்களைக்கூட தன்னுடை யதாக நினைத்து உடனே உதவி செய்யக்கூடிய பண்பு கொண்ட மகர ராசி நேயர்களே! வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் தேவையற்ற அலைச்சல்கள், அசையா சொத்து வகையில் சிறுசிறு பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உடல்நிலையிலும் சோர்வு, அசதி உண்டாகும். பண வரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும், அனுபவிக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சிலகாலம் தள்ளி வைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். புத்திரர்களாலும் வீண் விரயங்களைச் சந்திக்க நேரிடும். இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவானும் வரும் 15-11-2011 முதல் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபார நிலையில் வீண் போட்டிகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டு லாபக்குறைவு உண்டாகும். வங்கிக்கடன்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதுடன் வேலைப்பளுவும் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது உத்தமம்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்படும். இதனால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு, மந்தமான நிலை ஏற்படும். இதனால் மன அமைதியின்மை உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையை ஏற்படுத்தும். சிலருக்கு உஷ்ண நோய் ஏற்படலாம்.
பொருளாதார நிலை:
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தடையை ஏற்படுத்தும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பது அவசியமில்லை. கொடுக்கல்-வாங்கல் திருப்தி தராது. சில புதிய செலவுகளில் நீங்கள் அகப்பட்டுக் கொள்வீர்கள். பொருளாதார நிலையில் எதிர்பாராத ஒத்துழைப்புகள் கிடைக்காது.
குடும்பம்:
கணவன்-மனைவி ஒற்றுமையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி குடும்பத்தில் மன அமைதியற்ற நிலைமை ஏற்படும். உற்றார். உறவினர்கள் வருகையால் அதிக பண விரயம் உண்டாகும். நெருங்கிய உறவினர்கள் மூலம் அதிக பண நெருக்கடியும் வீணான மனஸ்தாபமும் ஏற்படும். உங்களின் வலிமை குறையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலைப் பளு கூடும். சிலருக்கு தேவையற்ற இட மாற்றம் ஏற்படும். புது முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்பட்டு அலைச்சலையும் வீண் செலவுகளையும் உண்டாக்கும்.
தொழிலாளர்களுக்கு:
தொழிலில் போட்டி, பொறாமைகள் கூடும். வேலைச் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையினால் கவலை உண்டாகும். கூட்டுத் தொழிலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினை உண்டாகும்.
பெண்களுக்கு:
குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை நீடிக்கும். பிறரிடம் இரவல் நகை வாங்குவதோ, கொடுப்பதோ வேண்டாத கவலையை உண்டாக்கிக் கொடுக்கும். பெண்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்க காலதாமதம் ஆகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்பட தடை உண்டாகும்.
கலைஞர்களுக்கு:
வாய்ப்புகள் குறையும். தொழில்ரீதியாக எதிர்ப்புகள் அதிகமாகும். வருமானம் திருப்தி தராது. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதாரரீதியாக தன வரவுகள் சிறப்பாக இருக்காது. நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும்.
விவசாயிகளுக்கு:
விவசாயத்தில் மகசூல் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைப்படும். பெரிய அளவில் விவசாயப் பணிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். பங்காளி பகை அதிகரிக்கும்.
இளைஞர்களுக்கு:
புது முயற்சிகளில் தோல்வி உண்டாகும். எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். சக நண்பர்களால் வீண் அலைச்சலும் செலவும் உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கம் சாதகமான பலனைத் தராது.
மாணவர்களுக்கு:
மாணவர்களின் கல்வியில் ஆர்வம் குறையும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை.

உங்கள் உடல்நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். மருத்துவச் செலவுகள் ஓரளவுக்குக் குறைந்து காணப்படும். புதிய முயற்சிகள் சிறிது தடை தாமதத்தைக் கொடுக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் புதிய கடன்கள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் முழு திருப்தி அளிக்காது. தொழிலில் மிகவும் கவனம் தேவை. பொருள் வரவில் மந்தமான நிலை உருவாகும். செய்யும் தொழிலில் சஞ்சலமும் பொருள் விரயமும் உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க சிறிது காலமாகும். பெண்களுக்கு மங்களகரமான சுப காரியம் நடைபெறத் தடை ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் ஓரளவு சாதகமாக அமைவார்கள். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

உங்களுக்கு இக்காலம் வண்டிச் சக்கரம் போன்று காணப்படும். நன்மை-தீமை கலந்த பலன்கள் உண்டாகும். தொழில்ரீதியாக மாபெரும் திருப்பங்கள் உண்டாகும். எதையும் மந்தமாகச் செயல் படுத்தும் நிலை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் பிறரால் பொருட்கள் இழப்பு போன்ற அனுகூலமற்றப் பலன்களும் உண்டாகும். ஆனால் இழந்த பொருள்கள் கிடைக்கப் பெறும். உங்கள் வாழ்வில் குழப்பங்கள், அலைச்சல்கள் முற்றிலும் குறைந்து மனதில் தெளிவும் சந்தோஷமும் அமையப் பெறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். பொருள் வரவு சரளமாகத் தான் இருக்கும். அடிக்கடி சிற்சில பிரச்சினைகள் வந்து மறைந்திடும். புத்திர வழியில் நெடுநாளாகப் பூர்த்தியாகாமல் தடையைக் கொடுத்த நிகழ்ச்சிகள் எல்லாமே தற்போது ஏற்றத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும்.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். எடுத்த காரியம் உடனடியாக நற்பலன்களை உண்டாக்காது. பொருள் வரவு உண்டாக சிறு தடை ஏற்படலாம். ஸ்திரச் சொத்து வகையிலும், பூர்வீகச் சொத்து வகையிலும் வீண்விரயங்களைக் கொடுக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்காது. தொழிலாளர்கள் முதுகெலும்பு உடைய உழைத்தாலும் வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காது. விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் இருக்காது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டாலும் மனதில் நிறைவு காணப்படாது. மாணவர்கள் அதிக கவனம் செலுத்திப் படித்தால் வெற்றி பெற முடியும். அதிக தூரப் பயணம் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். பெண்களுக்கு திருமண முயற்சி தடைப்பட லாம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடும்.

உங்கள் தேகநலம் சுமாராகவே காணப்படும். மனைவி மற்றும் பிள்ளைகள் நலம் சீராகவே இருக்கும். குடும்பத்தில் இருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். பண நெருக்கடி ஏற்பட்டாலும் நெருங்கிய உறவினரின் உதவியால் சமாளிப்பீர்கள். நண்பர்கள் ஓரளவு அனுகூலமாக இருப்பார்கள். பொருளாதார வகையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். உங்கள் பழைய கடன்கள் ஓரளவு குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப் பளு கூடினாலும் வருமான உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் படிப்படியான ஏற்றம் உண்டாகும். தொழிலில் ஓரளவு வளர்ச்சி ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று முன்னேற்றம் ஏற்படும். மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் சிறிது தாமதம் ஏற்படும்.

உங்கள் தேகநிலை சற்று சுமாராகவே இருக்கும். நீர் தொடர் புள்ள சில தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். மனைவி மற்றும் பிள்ளைகள் நலம் சீராகவே இருக்கும். பண வரவு நன்றாக இருந் தாலும் வரவுக்குத் தகுந்த செலவு ஏற்படும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். பொருளாதார நிலையில் திருப்தி இருக்காது. பழைய கடன்கள் சற்று குறையும். பிறருக்கு வாக்குறுதி தருவதையோ முன்ஜாமீன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். வியாபாரம் நன்றாக இருந்தாலும் எதிர் பார்க்கும் லாபம் கிடைக்காது. பெரிய முதலீடு செய்வதையோ புதுமுயற்சிகளையோ தவிர்க்க வேண்டும். கமிஷன் ஏஜென்சி, காண்ட் ராக்ட் துறையினர் ஓரளவு நற்பலனை அடைவர். பெண்களுக்கு சுபகாரிய முயற்சியை மேற்கொண்டால் தாமதமான பலனை ஏற்படுத்தும்.

உங்கள் தேகநிலை சுமாராகவே இருக்கும். வரவிற்கு மிஞ்சிய செலவு ஏற்பட்டு, பொருள் பற்றாக்குறை மேலோங்கும். குடும்பத்தில் அமைதிக் குறைவை உண்டாக்கும். புத்திர வழியில் புதுப்புதுச் செலவைக் கொடுக்கும். தொழில்ரீதியாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சிலர் வெளியூரில் வாழும் அமைப்பு ஏற்படும். இதன் மூலமாக உங்களுக்குப் பண வரவும் பொருள் வரவும் ஏற்படும். கலைஞர்கள் சுமாரான வாய்ப்புகளால் தன வரவைப் பெறுவார்கள். அரசு ஊழியர்களுக்கு நினைத்த பதவி உயர்வு, இட மாற்றம் யாவும் தாமதப்படும். அடிக்கடி உடல்நல பாதிப்பால் விடுப்பில் செல்ல வேண்டியது வரும். ஒருசிலருக்கு அரசு சலுகைகள், ஊதியங்கள் கிடைக்கத் தாமதமாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராகத் தான் இருக்கும்.
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் தேகநலனில் அதிக கவனம் தேவை. சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உடல்பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை ஏற்படுத்தும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்ற துறையில் இருப்போர் அனுகூலமற்ற பலனை அடைவர். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் தேவை. திருமண சுபகாரியம் தடைப்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும்.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் தேகநலன் பாதிக்கும். புது முயற்சிகள் தோல்வியைக் கொடுக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்பட்டு மன அமைதி குறையும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்படும். கூட்டுத் தொழிலில் குழப்பம் அதிகரிக்கும். அரசியல் வாதிகளுக்கு சோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளின் தொல்லையால் விளைச்சல் பாதிக்கும்.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை ஏற்றம் தராது. பெண்களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வு தடைப்படும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி : 5, 6, 8.
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்.
அதிர்ஷ்ட கல் : கருமுத்து.
அதிர்ஷ்ட தெய்வம் : ஐயப்பன்.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சி மூலம் குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு பகவானுக்குப் பரிகாரம் செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். 15-11-2011 முதல் சனி 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்வது, ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம். ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் உத்தமம்
கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
சமூக நலப்பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட கும்ப ராசி நேயர்களே! வரும் 8-5-2011 முதல் 17-5-2012 வரை குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இத்துடன் உங்களுக்கு, அஷ்டமச் சனியும் நடைபெறுகிறது. இது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உற்றார்- உறவினர்களிடையே பகை, சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை போன்றவை உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். கொடுக்கல் வாங்கலிலும் கொடுத்த கடன்களை திரும்பப் பெறமுடியாது. எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். நண்பர்களும் விரோதிகளாக மாறுவார்கள். 15-11-2011-ல் ஏற்படவிருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு அஷ்டமச் சனி முடிவடைந்து விடுவதால் ஓரளவுக்கு அனுகூலப் பலனை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பண வரவுகளிலிருந்த தடைகள் ஓரளவுக்கு விலகி, குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனேயே செயல்படுவீர்கள். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.
பொருளாதார நிலை:
பணப் பற்றாக்குறை இருக்கும். சிலருக்கு வண்டி வாகனம் வகை யில் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் கடன் கேட்டு தொந்தரவு செய்வர். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் ஏற்படும். பொருளாதார வகையில் நெருக்கடிகளைச் சமாளிக்க நேரிடும். புதிய கடன்கள் தோன்றும். சிலருக்கு சொத்து வகையில் இழப்பும் ஏற்படலாம்.
குடும்பம்:
குடும்பத்தில் எதிர்பாராத வகையில் வீண் விரயங்கள் அடிக்கடி ஏற்படும். கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை ஏற்படுத்தும். உறவினர்கள் வருகையால் பண விரயங்கள் ஏற்படும். வீடு மாறுவதன் மூலம் தன விரயங்கள் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும். மேலதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். நண்பர்கள் விரோதம், பகைமை பாராட்டுவர். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. சிலருக்கு எதிர்பாராத இடத்திற்கு மாற்றம் உண்டாகும்.
தொழிலாளர்களுக்கு:
வேலைப்பளு கூடுதலாக இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. சிலர் வேலையில் இருந்து விலகும் நிலை ஏற்படலாம். வரவுக்கு மிஞ்சிய செலவு உண்டாகும். மற்றவர்களிடம் கடன் பெறும் நிலையும் மேலோங்கும். அடிக்கடி பணிக்குச் செல்லாமல் லீவு போடும் சூழ்நிலையும் உண்டாகலாம்.
பெண்களுக்கு:
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றும். புத்திர வழியில் மனக்குழப்பமும் உற்றார்-உறவினர்களிடையே மனக் கசப்பும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு கூடும்.
கலைஞர்களுக்கு:
பட வாய்ப்புகள் குறையும். தொழில்ரீதியாக போட்டி, பொறாமைகள் அதிகமாகும். வருமானம் குறைவாகவே இருக்கும். வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரும். தன வரவுகள் தடைப்படும். பட வாய்ப்புகளை முழுமையாக முடிக்க முடியாத படி தடை உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
விவசாயத்தில் விளைச்சல் பாதிக்கும். புழு, பூச்சிகளின் தொல்லை அதிகரிக்கும். சரியான பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாள முடியாதபடி தடைகள் உண்டாகும். பெரிய அளவு விவசாயப் பணிகளை மேற்கொண்டால் நஷ்டம் உண்டாகும்.
இளைஞர்களுக்கு:
எடுத்த காரியம் யாவிலும் தோல்வியை உண்டாக்கும். பெற்றோரிடம் சுமூகமான உறவு நிலை ஏற்பட முடியாது. மனம் கவலையைக் கொடுக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.
மாணவர்களுக்கு:
கல்வியில் ஆர்வம் குறையும். தூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நன்றாகப் படித்தால்கூட அனைத்தும் மறந்துவிடும். சிலருக்கு பெற்றோரை விட்டுப்பிரிந்து வெளியூர் சென்று கல்வி கற்க நேரிடுவதால் மனம் அமைதியற்ற நிலையை தரும்.

இக்காலத்தில் நற்பலன்கள் உண்டாக முடியாமல் தடை ஏற்படும். மனைவி வழியில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு அசையா சொத்து வகையில் செலவுகளும் தேவையில்லாத சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படும். கவலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது மிகவும் அனுகூலமான பலனைத் தரும். கணவன்-மனைவி இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். செய்யும் தொழிலில் மறைமுக எதிர்ப்பும் அரசு வழியில் கெடுபிடிகளும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் நிம்மதி இல்லாத நிலையும், மேலதிகாரிகளின் கடுஞ்சொல்லைக் கேட்கும் நிலையும் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் மிகவும் சிக்கலை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் சற்று குறையும்.

உங்களுக்கு பண வரவு தடையாகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்காமல் போகும். குடும்பத்தில் வீண் தகராறுகள் ஏற்படும். செய்யும் தொழிலில் இடையூறுகளும் இன்னல்களும் தோன்றும். உற்பத்தி பாதிக்கும். லாபம் குறையும். பொருளாதார நெருக்கடிகளால் கொடுக்கல். வாங்கலில் கெட்ட பெயர் எடுக்க வேண்டியிருக்கும். கடன்காரர்கள் மிகவும் தொல்லை கொடுப் பார்கள். கெட்ட நண்பர்களால் கெடுதியும் தீமையும் ஏற்படும். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். அரசாங்க உத்தியோக ரீதியில் பகைமைகள் தோன்றும். இல்லற வாழ்விலும் குடும்ப வாழ்விலும் மனதை ஈடுபடுத்த முடியாதபடி மன உளைச்சலும் அமைதிக் கேடும் ஏற்பட்டபடி இருக்கும். விவசாயிகளுக்கு பயிர்ச் சேதம் ஏற்பட்டு நஷ்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு இல்வாழ்வில் சோதனைகள் கூடும்.
குரு வக்ர கதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்களின் புதிய முயற்சிகளில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் பொருளாதார ரீதியான நெருக்கடிகளும் ஏற்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். கொடுக்கல்-வாங்கல் முழுத் திருப்தி அளிக்காது. தொழிலில் மிகவும் கவனம் தேவை. சோதனைகளும் நெருக்கடி களும் தோன்றும். குடும்பத்தில் பொருள் பற்றாக்குறையும் வேலை வாய்ப்புகள் அமைவதில் தடைகளும் ஏற்படும். புதிய முயற்சிகள், திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழி ஒற்றுமை குறையும். கலைஞர்களுக்குப் போதிய வாய்ப்பு ஏற்பட தடை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். அரசியல் வாதிகளுக்கு நெருக்கமானவர்களே துரோகம் செய்ய எண்ணு வார்கள். விவசாயிகளுக்கு அரசு வழியில் உதவிகள் கிடைக்க தடை, தாமதம் உண்டாகும். பெண்களுக்கு வீண் மனக் குழப்பம் ஏற்படும்.

இக்காலத்தில் தேகநலனில் கவனம் செலுத்த வேண்டும். பித்த சம்பந்தமான நோய்கள், அலைச்சல், சோர்வு போன்ற உடல் உபாதைகளை உண்டாகும். பொருளாதாரத்தில் நெருக்கடியான நிலையும் குடும்பத்தில் அமைதி குறைந்து நிம்மதியற்ற நிலையும் உருவாகும். கொடுக்கல்-வாங்கல் மூலம் நண்பர்கள் விரோதிகளாகும் நிலையும் உண்டாகும். உறவினர்களால் தேவை இல்லாத செலவுகள் உண்டாகும். வேலைப் பளுவும் பொறுப்புகளும் கூடி அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு உண்டாகும். நல்லதே செய்தாலும் வெளிவட்டாரப் பழக்கத்தால் நன்மை இருக்காது. விவசாயிகளுக்கு கடன் தொல்லைகள் ஏற்படும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் லாபம் இராது. கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகளில் தடை உண்டாகும். தன வரவுகளில் அவ்வளவாக அனுகூலம் இல்லை.

உங்களின் தேக ஆரோக்கியம் சாதகமாக இருக்காது. தொழில் ரீதியாக சிறுசிறு சங்கடங்களை உண்டாக்கும். உங்களுக்கு ஏற்றமான பலன்களையும் உண்டாக்காது. கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகளை உச்சநிலைக்குக் கொண்டு சென்றுவிடும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் மிகவும் அதிகமான அலைச்சல்களையும் டென்ஷனையும் பெறக்கூடிய காலமாகும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிகக் கெடுதியான பலன்களையே ஏற்படுத்தும். மற்றவருக்கு ஜாமீன் கொடுப்பதோ அல்லது கடன் கொடுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். பண வரவுகள் யாவுமே தடையைக் கொடுத்திடும். பெண்களுக்கு இல்வாழ்வில் சோதனை கள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பட வாய்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு குறையும்.

உங்களுக்கு சோதனை நிறைந்த காலமாகவே இருக்கும். செய்யும் பணியில் சுபிட்சம் உண்டாகத் தடை உண்டாகும். விவசாயிகளுக்கு உற்பத்தி தடை, பெண்களுக்கு சுக வாழ்விற்கு தடை போன்ற அனுகூலமற்றப் பலன்களை உண்டாகும். பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை. வீண் அலைச்சல் அதிகமாக உண்டாவதால் குறிப்பிட்ட வேளைக்கு முறையாக சாப்பிடமுடியாமல் போகும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளில் நிதானமாகச் செயல்பட வேண்டும். புத்திர வழியில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். கலைஞர்கள் தொழில்ரீதியாக தற்போது பெரிய பெரிய போட்டிகளைச் சந்திக்கும் நிலையைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கடுமையாக உழைக்க வேண்டும்.
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
உங்களுக்கு தொழிலில் சங்கடம், அலைச்சல் ஏற்படும். பொருளாதாரரீதியில் பற்றாக்குறை ஏற்பட்டு கடன் வாங்கும் அமைப்பு உண்டாகும். இல்லற வாழ்வில் இனிமை இருக்காது. மாணவர்களின் கல்வியில் கடின முயற்சி தேவை. செய்கின்ற தொழிலில் லாபம் குறையும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு கூடும். புது முயற்சியைத் தவிர்க்கவும்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
குடும்பத்தில் வரவுக்கு மிஞ்சிய செலவைக் கொடுக்கும். பொருள் வரவு மந்தமாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை, தாமதம் உண்டாகும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் கடன் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிரமம் உண்டாகும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. பெண்கள், கணவர் மற்றும் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு:
தேகநலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு சுபகாரிய நிகழ்ச்சிகளில் தடை உண்டாகும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் சற்று குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் இருக்காது. விவசாயிகளுக்கு விளைச்சல் பாதிக்கும். புது முயற்சியில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி : 6, 8.
அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட கிழமை : புதன், வெள்ளி, ஞாயிறு.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்.
அதிர்ஷ்ட கல் : கருமுத்து.
அதிர்ஷ்ட தெய்வம் : ஆஞ்சனேயர்.
பரிகாரம்:
இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குரு 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு பகவானுக்குப் பரிகாரம் செய்வது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். 15-11-2011 வரை அஷ்டமச் சனி தொடருவதால் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது, ஏழை- எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, காக்கைக்கு தினமும் அன்னம் வைப்பது உத்தமம்
மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
எதிலும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படும் மீனராசி நேயர்களே! பொன்னவனான குரு பகவான் வரும் 8-5-2011 முதல் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். கடந்த காலத்திலிருந்த பணப் பிரச்சினைகள் குறைந்து பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சி, தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு போன்ற சாதகமான பலன்கள் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் போன்றவற்றால் மன நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறமுடியும். என்றாலும், 15-11-2011 முடிய 7-ஆம் வீட்டில் சனி சஞ்சரிக்க இருப்பதால் கூட்டாளிகளிடமும் உடன் பழகுபவர் களிடமும் எச்சரிக்கை தேவை. 15-11-2011 முதல் அஷ்டமச் சனியும் தொடங்கவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதி ருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைத்தாலும் வேலைப் பளுவும் அதிகரிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தேவையற்ற பயணங் களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.
ஆரோக்கியம்:
உங்கள் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளும் சிறப்பான நலத்துடன் காணப்படுவார்கள். மருத்துவச் செலவுகள் இருக்காது. குழந்தைகள் மூலம் சுபச் செலவுகள் உண்டாகி மன மகிழ்ச்சி ஏற்படும். உடன்பிறப்பு வழியிலும் நற்பலன்கள் ஏற்படும். உங்கள் வலிமையும் வளமும் கூடும்.
பொருளாதார நிலை:
கொடுக்கல்-வாங்கல் சிறப்பாகவே இருக்கும். மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் பொருளாதார முன்னேற்றம் மிகவும் சாதகமாக அமையும். அரசு வழியில் உதவிகள், நெருங்கிய உறவினர்கள். பெரியோர்களது ஆலோசனைகள் நற்பலனை ஏற்படுத்தும். பழைய கடன்கள் யாவும் மறையும்.
குடும்பம்:
கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இனிய சம்பவம் நடைபெற்று மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு புதுவீடு குடிபுகும் யோகமும் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும். உறவினர் வருகையால் நன்மை ஏற்படும். பண வரவில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாகவே காணப்படும். எதிர்பார்க்கும் இட மாற்றம், உத்தியோக உயர்வு ஆகியவற்றில் சாதகமான நிலைகள் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். நிலுவைத் தொகை வரவு ஏற்பட வழியுண்டு. வெளியூர் பயணங்கள் அனுகூலம் தரும்.
தொழிலாளர்களுக்கு:
தொழில்ரீதியாக இருந்து வந்த போட்டி, பூசல்கள் யாவும் விலகி மிகவும் உயர்வான நற்பலன்கள் கொடுக்கும். அதிக முதலீடு செய்து தொழிலைத் துணிந்து விரிவுபடுத்தலாம். வெற்றியும் லாபமும் ஏற்படுத்தும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மேலதி காரிகள் அனுசரணையும் கிடைக்கப் பெறும். இல்லத்தில் சுப காரியம் முன்னிட்டு முதலாளிகளிடம் அட்வான்ஸ் வாங்குவீர்கள்.
பெண்களுக்கு:
உடல்நலம் சுபிட்சமாக அமையும். குடும்பத்தில் தாய்வழியில் நன்மைகள் கூடும். மண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடி நல்லமுறையில் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கலைஞர்களுக்கு:
சிறப்பான ஒப்பந்தங்களில் கையொப்பம் இடுவீர்கள். பட வாய்ப்புகள் அதிகமாகும். மனதில் சிறப்பான சந்தோஷமும், கலைஞர்களுடன் சுமூகமாகப் பழகும் வாய்ப்பும் உண்டாகும். சின்னத் திரையிலும் உயர்வான நிலை உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
புதிய விவசாயப் பணிகளை மேற்கொள்வீர்கள். புழு, பூச்சிகளின் தொல்லைகள் மறையும். விளைபொருட்களுக்கு நல்ல விலை கிட்டும். கால்நடைகளால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நெருங்கியவர்கள் உதவி செய்வார்கள்.
இளைஞர்களுக்கு:
புதிய வாழ்வு ஏற்படும். மற்றவர்கள் பாராட்டும் நிலை உண்டாகும். கையில் காசு இல்லாத நிலைமாறி பண நடமாட்டம் நன்றாக இருக்கும். பெரியவர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். புது முயற்சி வெற்றி தரும்.
மாணவர்களுக்கு:
கல்வியில் உங்களது மந்தமான நிலைகள் மாறி உற்சாகமுடன் நல்ல உயர்வைப் பெறுவீர்கள். உங்களது கெட்ட பெயர் மாறி நல்ல மாணவன் என்று பெயர் எடுப்பீர்கள். அறிவியல், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் மேற்கல்விக்காக உதவிகள் கிட்டும்.

இக்காலத்தில் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் அனைவரின் நலமும் சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழிலினால் ஏற்றமும் உயர்வும் உண்டாகும். பொருளாதாரரீதியில் தன வரவும் பொருள் வரவும் அற்புதமாகவே அமையும். கூட்டுத் தொழிலால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். பகைவர்களும் நண்பர்களாகி விடுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் போன்ற சுப காரியம் கைகூடும். கலைஞர்கள் வாய்ப்புகளால் தனவரவைப் பெறுவார்கள். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் லாபம் பெருகும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

உங்கள் தேக ஆரோக்கியமும் ஆற்றலும் மிக அற்புதமான நிலையில் காணப்படும். உங்களுக்கு பொருள் வரவு சிறப்பாகவே இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பு உண்டாகும். புதிய தொழில் இக்காலத்தில் தொடங்கலாம். சிலருக்கு திடீர் திடீரென்று பண வரவு ஏற்படும். பழைய கடன்கள் யாவும் வசூலாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணமும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும் ஏற்படும். மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்நிலையை அடைவார்கள். அரசியல்வாதிகளின் புகழ், செல்வாக்கு, செல்வம், கௌரவம் யாவும் கூடும் காலமாகும். விவசாயத்தில் விளைச்சல் பெருகும்.
குரு வக்ரகதியில்
31-8-2011 முதல் 25-12-2011 வரை சஞ்சாரம்
உங்களுக்கு உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு திடீர் சோதனைகளை உண்டாக்கும். ஓரளவுக்கு மருத்துவச் செலவுகள் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் அதிகமான நற்பலன்கள் ஏற்பட்டாலும் அதை முழுவதும் அனுபவிக்கத் தடை உண்டாகும். கணவன்-மனைவியின் உறவில் திருப்தி இருக்காது. பூர்வீகச் சொத்து வகையில் சிலருக்கு செலவைக் கொடுக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். திருமண முயற்சிகள் தடையை ஏற்படுத்தித் தரும். எதிர்பார்த்த பண வரவுகள் தாமதத்துடன் கிடைக்கப் பெறும். பிறருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்த்தல் வேண்டும். செய்கின்ற தொழிலில் மந்தமான நிலையும் போட்டி, பொறாமைகளும் உருவாகும். வரவுக்குத் தகுந்த செலவுகள் இருக்கும். விவசாயி களுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த நற்பலன் உண்டாகும்.

உங்களின் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கு மற்றவர்களின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கிடும் யோகமான நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் ஆடம்பரமான நல்ல பொருட்களின் சேர்க்கைகள் ஏற்பட்டபடியே இருக்கும். குடும்பத்தில் சுப விரயங்கள் உண்டாகும். புதிய தொழில் களை இக்காலத்தில் தொடங்கலாம். வெற்றிமேல் வெற்றி உண்டாகும். சிலருக்கு திடீரென்று பணவரவுகள் ஏற்படும். கணவன்- மனைவி உறவுகள் மிகவும் அன்னியோன்னியமான நிலையில் காணப்படும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் வகையில் சகாயம் ஏற்படும். கமிஷன் ஏஜென்சி, காண்ட் ராக்ட் போன்றவற்றால் ஏற்றமான பலன்களை அடைவீர்கள்.

உங்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். தேவையில்லாத பயணங்களால் அலைச்சல்கள் குறைந்து தன வரவுகள் அதிகமாக உண்டாகும். குடும்பத்தில் புத்திர வழி செலவுகள் குறையும். எதிர்பார்த்த தகவல்கள் அனுகூலத்தைத் தந்திடும். நண்பர்களும் நெருங்கிய உற்றார்-. உறவினர்களும் நட்புரிமை பாராட்டுவார்கள். அரசியல்வாதிகளின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். கலைஞர்கள் வெளியூர் வாய்ப்புகளால் அதிக தன வரவைப் பெறுவார்கள். மாணவர்களின் கல்வி சிறக்கும். செய்கின்ற தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மையும் அபிவிருத்தியும் உண்டாகும். விவசாயிகளுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

உங்களின் உடல்நலம் நன்றாகவே இருக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி உறவு ஒற்றுமையுடன் காணப்படும். தொழில்ரீதியாக ஏற்றங்கள் உண்டாகக் கூடிய நிலைகள் ஏற்படும். செய்யும் தொழில் சிறப்பாகத் தான் இருக்கும். நண்பர்கள் உதவி புரிவார்கள். புதிய சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் இந்த காலத்தில் அமையப் பெறும். குடும்ப சுபிட்சங்கள் அதிகமாகும். வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த லாபங்கள் கிடைத்திடும். சுருங்கச் சொன்னால் ஏற்றமான காலமாகும். இந்த காலம் நற்பலன்கள் அதிகமாகும். கலைஞர்களுக்கு தன வரவும் பொருள் வரவும் சிறப்பாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள். பெண்களுக்கு எதிர்பாராத தனவர வினால் ஆடை, ஆபரண யோகம் ஏற்படும்.
பூரட்டாதி 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் தேகநலன் சிறப்பாகவே இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றியினைக் கொடுக்கும். தொழிலில் ஏற்றமும் நல்ல உயர்வும் ஏற்பட்டு மிகச் சிறப்புகளைக் கொடுக்கும். புத்திர வழியில் பூரிப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் அமோகமான லாபங்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் கூடும். வெளிவட்டாரப் பழக்க-வழக்கங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். திருமணம் போன்ற மங்களகரமான காரியங்கள் இனிதே நடைபெற்று மன மகிழ்வை ஏற்படுத்தும். கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவை அமோக பலனை உண்டாக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பெருகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:
உங்களின் தேகநலன் நன்றாகவே இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் பெருகும். செய்கின்ற தொழிலில் நல்ல மேன்மை உண்டாகும். தன வரவும் பொருள் வரவும் நன்றாக இருக்கும். கமிஷன் ஏஜென்சி, காண்ட்ராக்ட் போன்றவற்றில் யோகம் கொடுக்கும். மாணவர்களின் கல்வியில் வெற்றி ஏற்படும். பெண்களுக்கு நினைத்த காரியம் நடைபெறும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை:
அதிர்ஷ்ட தேதி : 1, 5, 8.
அதிர்ஷ்ட திசை : வடக்கு.
அதிர்ஷ்ட கிழமை : ஞாயிறு, செவ்வாய்.
அதிர்ஷ்ட நிறம் : செந்தாமரை.
அதிர்ஷ்ட கல் : புஷ்பராகம்.
அதிர்ஷ்ட தெய்வம் : தட்சிணாமூர்த்தி.
பரிகாரம்:
இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 15.-11-.2011 வரை கண்டச் சனியும் அதன் பின்னர் அஷ்டமச் சனியும் நடைபெறவுள்ளதால் சனிகிழமைகளில் தொடர்ந்து சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது, முடிந்தால் திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்வது உத்தமம். ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம்